பிளிப்கார்ட் நிறுவனத்துக்கே விபூதி..கிளீனிங் பவுடர் ஆர்டர் செய்து ஐபோன் லேப்டாப் சுருட்டிய ஊழியர்கள்
கோவை: பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களில் ஆர்டர் செய்தால் சில நேரம் அதற்கு பதிலாக வேறு பொருட்கள் வரும். இந்நிலையில் கோவையில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்கள், தங்கள் முகவரிக்கு கிளீனிங் பவுடர் ஆர்டர் செய்து, பேக்கிங் செய்யும்போது அதற்கு பதிலாக ஐ போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி பெரும் மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் ஐபோன், லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ஏர் பட், ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகளவு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகம் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் தொடங்கி, உடை, செல்போன், டிவி உள்ளிட்ட வீட்டு அத்தியாவசிய ஆடம்பர பொருட்கள் வரை ஆன்லைனில் தான் புக் செய்யப்படுகின்றன.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் மோசடி
அதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. செல்போன் ஆர்டர் போட்டவருக்கு செங்கல் அல்லது சோப்பு டப்பா வருவது போன்ற பல்வேறு சர்ச்சைகள் பற்றி கடந்த காலங்களில் கேள்விபட்டிருப்போம். அதே பாணியில் பிரபல பிளிப்கார்ட் நிறுவனத்தில், அதன் ஊழியர்களே கைவரிசை காட்டி வசமாக சிக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள ஒக்கிலிபாளையம் பகுதியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் செல்லப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை, அங்கிருந்து பிரித்து பார்சல் செய்து சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
ஐபோன், லேப்டாப் திருட்டு
இந்நிலையில், அங்கு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய, சுமார் 7 கிலோ ரின் வாஷிங் பவுடரை, வாடிக்கையாளர் வாங்காமல் திருப்ப அனுப்பியுள்ளனர். ஆர்டர் செய்த பொருள் திரும்ப வந்ததால் அங்குள்ள பொறுப்பு ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். டீம் லீடராக உள்ள சேது கபிலேஷ் என்பவர், பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக விலை உயர்ந்த லேப்டாப் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்தவர் அவர்கள் நிறுவனத்திடம் தகவல் சொல்லி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பேக்கிங் பிரிவில் பணிபுரியும்,
விக்னேஷ், கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஷா, முகமது அலி, அஞ்சலி உள்ளிட்டோரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருகட்டத்தில் அவர்களாகவே உண்மையை ஒப்புக் கொள்ள பிளிப்கார்ட் நிறுவனமே அதிர்ந்து போயுள்ளது.
மொத்தம் 11 லட்சம்
"நாங்கள் ஆன்லைன் மூலம் எங்கள் முகவரிக்கு சோப்பு, கிளினிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்வோம். ஆனால் பார்சல் செய்யும்போது அதில் கிளினிங் பவுடருக்கு பதில் விலை உயர்ந்த ஐ போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பார்சல் செய்து அனுப்பி வைத்தோம்." என்று கூறியுள்ளனர். பிளிப்கார்ட் ஊழியர்களே இந்த மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் சக்திவேல்(64) என்பவர் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த செட்டிபாளையம் காவல்துறையினர் ஐ போன், விவோ, சாம்சங் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், ஏர்பட், ஸ்பீக்கர்கள், உள்ளிட்ட ரூ.11 லட்சம் மதிப்பிலான 19 பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட 7 பேர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஞ்சலி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications