கோவை அரசு பஸ்சில் எல்லை மீறிய காதல் ஜோடி.. இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து.. முகம் சுளித்த பயணிகள்
கோவை: கோவையில் அரசு பேருந்து ஒன்றில் காதல் ஜோடி ஒன்று முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோவில், இளம்பெண்ணை தனது மடியில் அமரவைத்துக்கொண்ட காதலன் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பொது இடங்களில் சில காதல் ஜோடிகள் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. பார்க், பீச், சினிமா தியேட்டர்களில் காதல் ஜோடிகள் சிலர் தங்கள் காதலை வளர்ப்பதும், வரம்பு மீறி அருகில் உள்ளவர்கள் என்ன நினைத்தால் என்ன? என்ற ரீதியில் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் கோவையில் பேருந்தில் ஒரு ஜோடி அத்துமீறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

காதலை வெளிப்படுத்தும் விதம்
காதல் என்பது புனிதமானது.. காதல் மனிதனை நல்லவனாக மாற்றும் சக்தி கொண்டது. மற்றவரின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியை காணும் மனப்பாங்கை உருவாக்கும் சக்தி காதலுக்கு உண்டு. சங்க காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை காதல் பற்றிய பல கதைகள் உள்ளன.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்கள் உலகையே மறந்து விடுவார்கள் என்ற பழமொழியும் உண்டு. காதலைப்பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். புனிதமான இந்த காதலை வெளிப்படுத்தும் விதம், சுற்றியுள்ளவர்களுக்கு சங்கடம் உண்டாக்கும் அளவுக்கு சில நேரங்களில் போய் விடுகிறது.
அரசு பஸ்சில் எல்லை மீறிய காதல் ஜோடி
பொது இடங்களில் கூட தங்களின் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி, மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் தற்போதைய கால கட்டத்தில் அடிக்கடி நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் கோவையில் ஒரு டவுன் பேருந்தில் நடந்துள்ளது.
கோவையில் அரசு பேருந்து ஒன்றில் காதல் ஜோடி பயணித்துக் கொண்டு இருக்கிறது. பேருந்து முழுக்க பயணிகள் இருந்தாலும் இந்த ஜோடி, எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல், உலகத்தை மறந்து வரம்பு மீறிய செயலில் ஈடுபடுகிறார்கள். இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் போக போக எல்லை மீறி சென்றன.
சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ
இதனைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்தனர். காதல் ஜோடி அத்துமீறிய செயலில் ஈடுபட்டதை தாங்க முடியாத நபர் ஒருவர் இதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அதில், இளம்பெண்ணை தனது மடியில் அமரவைத்துக்கொண்ட இளைஞர் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பேருந்தில் உள்ள பயணிகளும், கொஞ்சமாவது பொது அறிவு வேணாமா.. பேருந்தில் பெரியவர்கள் இருக்கிறார்கள்.. சொந்தக்காரர்கள் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கெல்லாம் இருக்கும். ஆனால் இதனை பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி இப்படி பண்ணுகிறார்களே.. என்று பயணிகள் பேசிக்கொள்வதும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறும் போது, "காதலிப்பது தனிமனித சுதந்திரம்.. அதனால் மேலோட்டமாக பார்த்தால் தவறு இல்லை.. ஆனால் பொது பேருந்தில் கணவன், மனைவியே இப்படி உட்காரும் கலாசாரம் இல்லாததால் இவ்வாறு பயணிப்பது தப்புதான்.
இன்றைய 2கே கிட்ஸ்கள்
குழந்தை வேறு பக்கத்தில் உள்ளது. டாக்சி புக் பண்ணி எப்படி வேணா போகலாம்" என்று பதிவிட்டுள்ளார். சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இதுபோல நிகழ்வுகள் முன்பெல்லாம் நடப்பதாக கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோவை வரை வந்துவிட்டது. இன்றைய 2 கே கிட்ஸ்கள் பலருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை..
எதைப்பற்றியும் அக்கறை இல்லை என்று பதிவிட்டுள்ளார். சில நெட்டிசன்கள் கூறுகையில், இந்த வீடியோ காட்சிகளை வைத்து அந்த காதல் ஜோடிக்கு போலீசார் உரிய அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும். பொது இடங்களில் இப்படி அநாகரிகமாக நடப்பது அப்போதுதான் தடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications