கோவையில் பாட்டு வாத்தியாரை"அலேக்கா"அள்ளிய போலீஸ்..கோயம்புத்தூர் அரசு பள்ளியில் பெண்களிடம் ஒரே சேட்டை
கோவை: கோவையில் அரசு பள்ளியில் நடந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையும் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
கோவையில் கடந்த வருடம் அரசு பள்ளியில் எழுந்த பாலியல் புகாரானது மிகுந்த பரபரப்பை தந்துவிட்டது.. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த பட்டியலின மாணவிக்கு, அந்த பள்ளியின் 40 வயதான உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாரணை: இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற வழக்கு விவரங்களிலிருந்து, 6 ஆசிரியர்கள் மீது கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
பேரூர் மகளிர் போலீசில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர், மாணவியை மிரட்டியதாக ஆங்கில ஆசிரியர், அறிவியல் ஆசிரியை, இடைநிலை ஆசிரியர், இன்னொரு பெண் ஆசிரியை உள்ளிட்ட 6 பேர் மீதும் மிரட்டல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்தது.
காவல்துறை: இறுதியில் மாணவியிடம் மேற்கொண்ட தொடர் விசாரணை அடிப்படையில், மேலும் 12 பேரிடம் பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.. அந்தவகையில், கோவையில் அரசுப் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், 5 ஆசிரியர்கள் உட்பட 6 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.
இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்துள்ளது.. கோவை மாவட்டம் நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்.. இவருக்கு 53 வயதாகிறது.. காரமடை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பாட்டு வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது பாலியல் புகார்கள் கிளம்ப துவங்கின.. பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பத்மநாபன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்கிறார்கள்.
பெற்றோர்: சம்பந்தப்பட்ட மாணவிகள், இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார்களை தந்துள்ளனர்.. இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முருகானந்திக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.
இந்த மொத்த புகார்களின் பேரில், பத்மநாபனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், பாட்டு வாத்தியாரான பத்மநாபன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) சித்ரா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..
அதிரடி கைது: தற்போது அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அரசு பள்ளி மாணவிகளுக்கு, பாட்டு வாத்தியார் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications