கோவை மணமணக்குது.. மட்டன், சிக்கன் என 300 அயிட்டம்.. கோயம்புத்தூரில் உணவுத் திருவிழா.. எப்போ தெரியுமா
கோவை: கோவையில் பிரம்மாண்ட உணவு திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை யார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் தெரியுமா? உணவு திருவிழா எப்போது தெரியுமா?
தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் கோவையில் பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சி நடத்துவது வழக்கமாகும்..

உணவு திருவிழா: அந்தவகையில் இந்த வருடமும் உணவு திருவிழா நடத்தப்படுகிறது.. வரும் நவம்பர் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி என இரு நாட்கள் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. அத்துடன் இந்த திருவிழாவில் பொதுமக்கள் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இதற்கான லோகோ வெளியீடு நடைபெற்றது.. அச்சங்கத்தின் தலைவர் நாகராஜ் செய்தியாளர்களிடம் இதுகுறித்து விவரித்து சொன்னதாவது:
கேட்டரிங் நிறுவனம்: கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், வருடந்தோறும் உணவு திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும்.. இந்த வருடம் கோவை விழாவுடன் இணைந்து தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் கொடிசியா மைதானத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த உணவு திருவிழாவில், 1000 க்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்க கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த உணவு திருவிழாவுடன் இந்த வருட திருமண கண்காட்சியையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக எங்கள் சங்கம் சார்பில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்..
பங்கேற்பு: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் கீழுளள 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள சுமார் 600 கேட்டரிங் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் சுமார் 1000 கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்க போகிறார்கள்.
இந்த உணவு திருவிழாவிற்க்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், சைவம் மற்றும் அசைவம் என சுமார் 300-க்கும் அதிகமான விதவிதமான உணவு வகைகளை உண்ணலாம்... இதற்காகவே, கிட்டத்தட்ட 600 கேட்டரிங் நிறுவனங்கள் 400 வகையான உணவுகளை தயார் செய்ய போகிறார்கள்.
சமையல் வகைகள்: உணவுகள் அனைத்தும் மிகப்பெரும் பூபெ (BUFFET) அமைப்பில் வைக்கப்பட்டிருக்கும். இதில் வெவ்வேறு சமையல் வகைகளின் கீழ் உள்ள உணவுகள் அனைத்தும் இடம்பெற உள்ளது.. முக்கியமாக உடலுக்கு மிக ஆரோக்கியமான சிறு தானிய வகைகளில் செய்யப்படும் சுவை மிகுந்த உணவு வகைகளும் இந்த உணவு திருவிழாவில் இடம்பெறும்.. இதற்காகவே, இந்த நிகழ்வின் நுழைவு பகுதியில் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, அதில் திருமண நகைகள், ஜவுளி வகைகள் காட்சிப்படுத்தியும், விற்பனைக்கும் வைக்கப்பட்ட உள்ளன.
மைதானத்தில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு பிரிவில் அதிகபட்சம் 2000 பேர் உணவு உண்ணும்படி அமைப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த 2 நாட்களில் எப்படியும் சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம்: இந்த நிகழ்வில், பொதுமக்களை கவரக்கூடிய, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற போகின்றன.. குறிப்பாக, பிரபல சூப்பர் சிங்கர்ஸ், நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டுமானால், பெரியவர்களுக்கு ரூ.800 கட்டணமாகவும் சிறியவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications