ஆசியாவிலேயே பெரிய முருகன் சிலை.. 180 அடி உயரத்துக்கு கோவை மருதமலையில் அமைகிறது: பக்தர்கள் மகிழ்ச்சி
கோவை: கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 180 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது, முருகப்பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்புத்தூரிலுள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செல்கிறார்கள்.

லிப்ட் வசதி: இதனிடையே, கோயிலுக்கு வாகனங்கள் மூலம் செல்பவர்கள், பார்க்கிங் இடம் வரை சென்று, அங்கிருந்து படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர்... அதனால், இங்குள்ள படிக்கட்டுகளை ஏறுவதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக இருப்பதை அறிந்த அறநிலையத்துறை, பக்தர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க திட்டமிட்டது.
இதற்காக கோயிலின் ராஜ கோபுரம் அருகே ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.. அதேபோல, இதற்காக கோயில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் கொடிமரம் மண்டபம் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு குட்நியூஸ் அறிவித்துள்ளார் தமிழக அமைச்சர்.
நேரில் ஆய்வு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.. முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சருடனான ஆய்வில் பங்கேற்றனர்.
மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், மாஸ்டர் திட்டத்தில், பார்க்கிங் அமைப்பதற்கான இடங்கள், லிப்ட் அமைக்கும் பணி, திருமண மண்டபம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு, சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
"திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. பழனியில் அன்னை தமிழிலும் குடமுழுக்கு நடந்துள்ளது.. 60 வயது முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களை, அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில், ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவின் மூலம் இதுவரை, 1,622 பேர் பயனடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்: தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஏழு முருகன் கோவில்கள் பெருந்திட்ட வரைவிற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 400 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, பழனி தண்டாயுதபாணி கோயிலில், முதல் பெருந்திட்ட வரையில், 99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், இரண்டாம் பெருந்திட்ட வரைவில், 50 கோடி ரூபாய் மதிப்பில் நில ஆர்ஜிதம் செய்யும் பணியும், திருத்தணியில், 183 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், அடுத்த மாதம் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், அங்கேயும்30 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. நீலகிரி மாவட்டம் ஊட்டி, காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 16 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 7 முருகன் கோவில்களில் மட்டும், 872 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருதமலை கோயில்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை பொறுத்தவரை, முதற்கட்டமாக, ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுடன், ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.. 2ம்கட்டமாக, 11 கோடியில் திட்டப்பணிகளும், 3ம் கட்டமாக, 23 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிறுவாபுரி திருக்கோவிலில், 16 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.. மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள், ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் முடிவடையும்.. அப்பணிகள் முடிந்ததுமே, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
முருகன் சிலை: அதேபோல, மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயரத்தில், கல்லினாலான முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டது. சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதுமே, ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்..
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.. வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, தேவையான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.. இந்த வருடம் முதல் மலையேறும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.. விரைவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்" என்றார் அமைச்சர் சேகர்பாபு.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications