காட்டுத்தனமாக அடித்த எஸ்ஐ.. டிரான்ஸ்ஃபர் செய்தால் போதுமா?.. சஸ்பெண்ட் செய்யணும்.. ஓட்டல் ஓனர் மனு!
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தனியார் உணவகத்திற்குள் புகுந்து பணியாளர்கள் மற்றும் பெண்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உணவக உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Recommended Video
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில், உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பெண் உட்பட பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடுமையாக தாக்கினார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

புகார் பெட்டி
இந்நிலையில் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் மோகன்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், புகார் பெட்டியில் மனுவை போடும்படி போலீசார் தெரிவித்ததால், மனுவை புகார் பெட்டியில் செலுத்தினர்.

வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மோகன்ராஜ், இரவு 11 மணி வரை கடை செயல்பட நேரம் உள்ள நிலையில் காட்டூர் போலீஸ் உதவி ஆய்வாளர் கடைக்குள் புகுந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கடுமையாக தாக்கினர். பசி என்று கேட்டதால் பெண்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு வழங்கினோம்.

போலீஸ் அதிகாரிகள்
ஆனால் உள்ளே புகுந்த உதவி ஆய்வாளர் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது முதல் முறை அல்ல இதே போல் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை சில போலீசார் அச்சுறுத்துவதாகவும், இம்மாதிரி கொடுரமாக நடக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது பணியிட மாற்றம் நடவடிக்கை போதாது.

பணி நீக்கம்
பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க சென்றோம் ஆனால் தேர்தல் விதிமுறைகளால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறுகின்றனர். தாக்குதல் நடக்க காரணமானவர்கள் எவ்வாறு உரிய விசாரணை செய்வார்கள், எனவே உரிய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications