Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வயாகரா".. 3 பேருடன் உறவு.. இயற்கைக்கு மாறான "டார்ச்சர்".. அலறி தப்பி.. போலீசுக்கு ஓடிய பரிதாப மனைவி

இயற்கைக்கு மாறான வகையில் உறவு வைத்து கொள்ள சித்ரவதை செய்ததால் மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கோவை: இளம்பெண் ஒருவர், அதுவும் பட்டதாரி பெண் ஒருவர் கோவை போலீசாரிடம் அளித்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த விசாரணையும் துரிதமாக ஆரம்பமாகி உள்ளது.

கோவையை சேர்ந்தவர் அந்த பெண். 25 வயதாகிறது.. பிடெக். பட்டதாரியும்கூட.. கஞ்சா போதையில் இயற்கைக்கு மாறான வகையில், கணவரிடம் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார்.. அத்துடன், தன் நண்பருடனும் சேர்ந்து 3 பேராக உறவு கொள்ள வேண்டும் என்றும் மனைவியை வற்புறுத்தினாராம் அந்த கணவர்.

இதெல்லாம் பார்த்து அதிர்ந்து போன அப்பெண், போலீசுக்கு ஓடியுள்ளார்.. கோவை மாநகர கிழக்கு பெண் போலீசார், அந்த பெண் தந்த புகாரின்பேரில் எப்ஐஆரும் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாவது:

வயாகரா

வயாகரா

"கோவையைச் சேர்ந்த, 25 வயது பிடெக் பட்டதாரி பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சொந்தமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் கோவை இளைஞருக்கும் 2021ல் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் சார்பில், 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசை கொடுத்துள்ளனர். தன் கணவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதை திருமணத்துக்கு பின் அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். கணவரின் கஞ்சா பழக்கத்தை, அவரது பெற்றோரும் கண்டுகொள்ளவில்லை. கஞ்சா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை. கஞ்சாவுடன், வயாகரா மாத்திரையும் உட்கொண்டு வந்துள்ளார்.

 இயற்கைக்கு மாறான உறவு

இயற்கைக்கு மாறான உறவு

இந்நிலையில், 2021ல் உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்ற இடத்தில், மனைவி உடை மாற்றிய போது, கணவர் நிர்வாணமாக அவரை போட்டோ எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், போர்வையை சுற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். மாமனார், மாமியார், கணவரின் அத்தை ஆகியோர் சேர்ந்து, நிர்வாணமாக இழுத்துச்சென்று கணவரின் அறையில் தள்ளி விட்டனர். ஆபாச வீடியோவை பார்க்க வைத்த கணவர், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டார். இந்நிலையில், 2022 ஜனவரியில் பீளமேடு அருகே நண்பரின் ஷெட்டுக்கு மனைவியை கணவர் அழைத்துச் சென்றார்.

 3 பேருடன் உறவு

3 பேருடன் உறவு

அங்கு தன் மொபைல் போனில் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து, மூன்று பேர் சேர்ந்து உறவில் ஈடுபட வற்புறுத்தினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண், மகிளா கோர்ட்டில் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து சொல்லும்போது, "என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் செப்டம்பரில் அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தேன்.. ஆனால், அது குறித்து கேஸ் பதியவில்லை...

செட்டில்மெண்ட்

செட்டில்மெண்ட்

அதனால், கமிஷனரை சந்தித்து புகார் சொன்னேன். அப்போதும்கூட, வழக்கு எதுவும் பதியவில்லை. கார் குண்டு வெடிப்பு போன்ற வெவ்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்தனர். இதற்கு பிறகு, தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன்... அப்போது, போலீசார் கணவனிடம் சமரசமாக செல்லுமாறு சொன்னார்கள்.. அதாவது, கணவரின் நண்பர் மீதான புகாரை மட்டும் கைவிட்டு விடுமாறும், அதற்காக "செட்டில்மென்ட்" தர அவர்கள் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்..

ஆபீசர்ஸ்

ஆபீசர்ஸ்

இப்படி சொல்லியது, இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்தான்.. அதனால்தான், போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன்.. அதற்கு பிறகே அவர் விசாரணை அதிகாரியை மாற்றி, வேறு ஒரு அதிகாரியை நியமித்தார். ஆனாலும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கணவரால் எடுக்கப்பட்ட என் நிர்வாண படங்களை அழிக்க வேண்டும்.. இதுதான் என்னுடைய முதல் கோரிக்கையாக உள்ளது.. ஆனால், போலீசார் அதைக்கூட செய்யாமல் மெத்தனமாக உள்ளனர்" என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

 அடர்ந்த நம்பிக்கை

அடர்ந்த நம்பிக்கை

ஆனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை இதுகுறித்து சொல்லும்போது, ''வரும் 10ம் தேதிக்குள் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர். ''குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளனர். வழக்கை முன்பு விசாரித்த அதிகாரி மீது, மனுதாரர் சார்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.. அதனால் அதிகாரிகள் உத்தரவுபடி, வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+