கோவை "தேவி"யின் திருவிளையாடல்.. சொகுசு பங்களாவில் ஜாலியோ ஜாலி.. அதுவும் 3 பேர்.. கதிகலங்கிய போலீசார்
கோவை: 3 பெண்கள் கோவையையே அதிர வைத்திருக்கிறார்கள்.. இதுதான் இப்போது ஹாட் டாபிக்.. இந்த பெண்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
கடந்த சில நாட்களாகவே கோயம்புத்தூரில் திருட்டு சம்பவங்கள் நிறைய நடக்க ஆரம்பித்தன.. முக்கியமாக, நகை பறிப்பு சம்பவங்கள் மட்டுமே தொடர்ந்து அதிகரித்தது.. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.

ஒரே மாதிரியான, கேஸ்கள் குவியவும், போலீசார் அலர்ட்டானார்கள்.. இதையடுத்து, கொள்ளையரை பிடிக்க தனிப்படையும் இறக்கப்பட்டது.. சம்பந்தப்பட்ட பகுதிகளில்,போலீசாரும் மஃப்டியில் களமிறங்கி கண்காணிக்க துவங்கினர்.
டிராபிக்: அப்படித்தான் சம்பவத்தன்று டவுன்ஹாலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது, 3 பெண்கள் அவசர அவசரமாக ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறுவதை போலீசார் கவனித்தனர்.. ஆனால், சாலையில் அப்போது டிராபிக் அதிகமாக இருந்தது.. அந்த நெரிசலில்தான், 3 பெண்களும் ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறினர்.. இதனால், நெரிசலுக்கு இடையே புகுந்து ஆட்டோவை போலீசாரால் மடக்க முடியவில்லை.
சிசிடிவி கேமரா: எனவே, சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்தனர்.. அதன்படி, அந்த ஆட்டோ நம்பரை வைத்து, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரையும் பிடித்துவிட்டனர்.. அவரிடம் போலீசார் அந்த பெண்களை பற்றி விசாரித்தனர். அதற்கு டிரைவர், "அரசு மருத்துவமனையில் 3 பெண்களை இறக்கிவிட்டதாகவும், 200 ரூபாய்க்கு, 100 ரூபாய் மட்டுமே தந்ததாகவும் சொன்னார்.
உடனே போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் அதை சுற்றியுள்ள பஸ் ஸ்டாப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பெண்களும், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும், அங்கிருந்த இளைஞரிடம் போனை வாங்கி பேசிவிட்டு, பிறகு, பஸ் ஏறி சென்றதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
மருத்துவமனை: அந்த இளைஞரோ, அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம் பேசிவிட்டு சென்றதும் அதே கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால், போலீசார் அந்த இளைஞரின் போட்டோவை எடுத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட நபர், திருப்பூரை சேர்ந்தவர் என்றும், பிரசவ வார்டில் இருக்கும் பெண் ஒருவரின் உறவினர் என்பதும் தெரியவந்ததையடுத்து, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில், அந்த பெண்கள் பேசிய செல்போன் நம்பர் பதிவாகியிருந்தது.. உடனே அந்த நம்பரை வைத்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு சென்றார்கள்.. ஆனால், போலீசார் செல்வதற்குள், அந்த பெண்கள் ஓட்டலை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்தார்கள். எனினும், அந்த செல்போன் நம்பரை வைத்து சிக்னலை டிராக் செய்தனர்..
அந்த நம்பர் பெங்களூரில் இருப்பதாக காட்டியது.. பிறகு, சென்னையை காட்டியது.. எனவே, தனிப்படையினர் சென்னைக்கு வேனில் கிளம்பினார்கள்.. ஆனால், எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி வேன் விபத்துக்குள்ளாகிவிட்டது. இதில், 2 போலீசாருக்கு காயம் ஏற்படவும், அந்த பயணம் ரத்தானது.
செல்போன் நம்பர்: பிறகு மறுபடியும் போலீசார் அதே நம்பரை வைத்து, டிராக் செய்தனர்.. அந்த கும்பல் மருதமலைக்கு வந்திருப்பதாக தெரியவந்தது.. உடனே, மருதமலை கோயிலுக்கு கிளம்பிய போலீசார், அந்த கோயிலுக்குள்ளேயே 3 பெண்களையும் சுற்றிவளைத்தனர்.. அவர்களுடன் பரமக்குடியை சேர்ந்த ரவி என்பவரும் வந்திருந்தார். இப்போது 4 பேரிடமும் விசாரணை ஆரம்பமானது.
அந்த பெண்கள் பெயர் பழனியம்மாள், வனிதா, நதியா.. இதில் பழனியம்மாளின் கணவர்தான் இந்த ரவி.. 3 பெண்களுமே கிரிமினல்கள்.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.. ரவிதான் இவர்களுக்கு குருநாதர்.. இந்த ரவி சொல்கிறபடிதான், இந்த பெண்கள் நகைபறிப்புகளில் இறங்குவார்களாம்.. கூட்ட நெரிசலை பயன்படுத்தியே நகை, பணத்தை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்..
புது ரூல்ஸ் : இவர்களுக்கென்று ஒரு ரூல்ஸ் இருக்கிறது.. அதாவது மாதத்தில் 20 நாட்கள் திருடுவார்களாம்.. 10 நாட்கள் ஜாலியாக இருப்பார்களாம்.. அதுவும், ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே தங்கி அஜால்குஜாலில் ஈடுபடுவார்களாம்.
காஷ்மீர், டெல்லி, மும்பை என்று நாடு முழுவதும் ஜாலி டூர்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள்.. நகை திருடிய பணத்தில் பெங்களூரில் ஒரு சொகுசு பங்களாவே வாங்கி போட்டிருக்கிறார்களாம்.. அந்த வீடு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்.. இதைத்தவிர, காஸ்ட்லி கார், ஆடம்பர வாழ்க்கை என்று தடபுடலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், இப்படி திருடி திருடியே, இவர்களின் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினியரிங் என படிக்க வைத்திருக்கிறார்களாம்.. இந்த 3 பெண்களின் லீலைகளை கேட்டு போலீசாரே அதிர்ந்துவிட்டார்கள்.. விசாரணை இன்னும் முடியவில்லை.. நடந்து கொண்டிருக்கிறது.. பல நாள் திருடன், ஒருநாள் அகப்பட்டுத்தானே ஆவான்.. "முப்பெரும் தேவியர்கள்" இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications