கோவை மத்திய அரசு பணி தேர்வில் ஆள்மாறாட்டம்.. ஹரியானாவின் 4 பேர் கைது.. சிக்கியது எப்படி? சுவாரசியம்
கோவையில் மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மர பெருக்க நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது.
கோவை: கோவை-மேட்டுபாளையம் ரோட்டில் வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானாவின் 4 பேரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் எப்படி சிக்கினர்? என்பதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் கோவையில் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காடு வளர்ப்பு மற்றும் வனப்பரப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் இங்கு காலியாக உள்ள பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆன்லைனில் நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

எழுத்து தேர்வு
இதையடுத்து கடந்த மாதம் 4ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. போட்டோ மற்றும் கைரேகை பதிவு செய்த பிறகு விண்ணப்பம் செய்தவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்க்காணலுக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் தான் நேர்முகத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. அப்போது ஹரியானாவை சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் எழுந்தது.

ஆள்மாறாட்டம் - 4 பேர் கைது
இதையடுத்து வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆர் அமித் குமார் (வயது 30), எஸ் அமித் குமார் (26), அமித்(23), சுலைமான்(25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு
இவர்கள் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இவர்கள் 4 பேரும் எப்படி பிடிபட்டனர் என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்கியது எப்படி?
அதாவது ஆள்மாறாட்டம் செய்து கைதான 4 பேரும் பணிக்கான எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இருப்பினும் ஆங்கிலம் அவர்களுக்கு சரியாக தெரியவில்லை. மேலும் தேர்வு எழுதியவர்களின் கைரேகை பதிவும், தற்போது நேர்க்காணலுக்கு வந்தவர்களின் கைரேகை பதிவுகளும் ஒன்றாக பொருந்தவில்லை. இதனால் ஆள்மாறாட்டம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.












Click it and Unblock the Notifications