கோவை பங்களாவில் 2 மனைவியுடன் ஜாலியோ ஜாலி.. கிறுகிறுக்க செய்த இரிடியம்! யாரிந்த கோயம்புத்தூர் பிரபலம்
கோவை: கோவையில் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் வித்தை காட்டி, கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது.. என்ன நடந்தது?
கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த தொழிலதிபர் சிராஜூதீன்.. 44 வயதாகிறது.. இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இரிடியம் வாங்கி தருவதாக சொல்லி ரூ.11 கோடி வாங்கியிருக்கிறார். இரிடியத்தை வீட்டில் வைத்திருந்தால் அனைத்து வகை செல்வங்களும் குவிந்து விடும் என்று ஆசைகாட்டினாராம்.

இதை நம்பி பணம் தந்துள்ளார் சிராஜூதீன்.. ஆனால், பெரோஸ்கான் கடைசிவரை இரிடியம் வாங்கி தரவில்லை.. இதனால் ஏமாற்றமடைந்த சிராஜூதீன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
சமரசம்: போலீசாரும் இதுகுறித்து விசாரணையை கையில் எடுத்தனர்.. இதைப்பார்த்து பயந்துபோன பெரோஸ்கான், சிராஜூதீனிடம் சமரசம் பேசினார்.. முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தந்து விடுவதாகவும், பிறகு மீதி தொகையை படிப்படியாக திருப்பி தருவதாகவும், கேஸை வாபஸ் வாங்கிவிடும்படியும் சொல்லியிருக்கிறார். ஆனால், இதனை சிராஜூதீன் இதற்கு மறுப்பு சொல்லியிருக்கிறார். கேஸையும் வாபஸ் பெறவில்லை.
ராஜ் (எ) ராஜ நாராயணன், ஞான பாலாஜி, பொன் முருகானந்தம் ஆகிய கூலிப்படையினரிடம் சென்ற பெரோஸ்கான், சிராஜுதீனை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்றும், இதற்காக ரூ.50 லட்சம் கூலி தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.. உடனே 3 கூலிப்படையினரும் தங்களது அட்வான்ஸ் பணத்தை வாங்குவதற்காக, கோவையிலுள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு காரில் சென்றார்கள்.
பறிமுதல்: அங்கே முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மறுபடியும் காரில் சென்னையை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் இந்த விஷயம் அதற்குள் கோவை போலீஸுக்கு தெரிந்துவிட்டது.. எனவே சென்னைக்கு செல்லவிருந்த 3 பேரையுமே வாகன சோதனையின்போது பிடித்து கைது செய்தனர்.. 20 லட்சம் பணம், காரையும் பறிமுதல் செய்தனர். 3 பேரிடமும் விசாரணை ஆரம்பமானது. அவர்கள் தந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்து போனார்கள்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் சொன்னதாவது: இந்த 3 பேரில் மிகவும் பிரபலமான ரவுடி, செட்டிகுளம் ராஜ் ஆவார்.. இவர் மீது ஏற்கனவே 3 கொலை கேஸ் இருக்கிறது... பல கோடி ரூபாய் விவரங்களில் ஒருவரை மிரட்ட வேண்டுமானால், செட்டிகுளம் ராஜ் இறங்கிவிடுவாராம். சம்பந்தப்பட்ட நபரை கடத்தி சென்று மிரட்டி பணியவைத்துவிடுவாராம்.
மோசடி தலைவன்: இதில் முக்கிய குற்றவாளி பெரோஸ்கான்தான்.. இரிடியம் மோசடி கும்பல் தலைவனாக இருந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே இவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது... சில முக்கிய தொழிலதிபர்களிடமும் பெரோஸ்கான் மோசடி செய்திருக்கிறார்.. மோசடி செய்தே பல கோடி ரூபாய் குவித்தவர்.
செல்போன் டீலர் தொழிலிலும் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, வருமான வரித்துறையினர் இவரிடம் சோதனை நடத்தி ரூ.4.1 கோடி பறிமுதல் செய்தார்கள்.. இப்போது இந்த விவகாரத்திலும் சிக்கி உள்ளார். ஆனால் தற்போது பெரோஸ்கான் தலைமறைவாக இருப்பதால் வலைவீசி தேடி வருகிறோம்..
வழக்கு விசாரணை: எனவே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் குனியமுத்தூரில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், பெங்களூருவில் பெரோஸ்கானுக்கு இன்னொரு வீடு இருப்பதாக தெரிகிறது. மோசடி பணத்தில் ரூ.1.5 கோடியில் சொகுசு பங்களா கட்டி 2 மனைவிகளுடன் அங்கேயே ஜாலி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது..
இவருடன் சேர்த்து வெளிநாட்டில் வசிக்கும் அஷ்ரப்கான், சாலியா பீபி, மைசூரை சேர்ந்த அஜய், ஷாஜி, ஸ்ரீதர் உட்பட 6 பேரை தேடி வருகிறோம்" என்கிறதாம் போலீஸ் தரப்பு.
போலீஸ் எச்சரிக்கை: கடந்த வருடம் தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, இரிடியம் மோசடி குறித்து ஒரு தனி வீடியோவே வெளியிட்டிருந்தார்.. இரிடியம் கும்பலால் தமிழ்நாட்டில் பலர் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும், 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும், மக்கள் யாரும் ஏமாந்துவிட வேண்டாம் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications