கண்ணுக்கே தெரியாத அதிசயம்! கோவைக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.. பெங்களூர், ஹைதராபாத்தை விரட்டுதே!
கோயம்புத்தூர்: முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், தனது கோரமண்டல் நானோ தொழில்நுட்ப மையத்தை கோயம்புத்தூரில் தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.
கோயம்புத்தூரில் செய்யப்படும் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெங்களூர் , சென்னை, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களுக்கு போட்டியாக மாறும் அளவிற்கு இங்கே முதலீடுகள் குவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் இந்த முறை சென்னையில் மட்டுமின்றி கோவையிலும் பல்வேறு முக்கிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2024 TN Global Investor கூட்டத்திற்கு முன்னதாக பெரிய MNC நிறுவனங்களிடமிருந்து 2,000 கோடி முதலீடுகளை கோயம்புத்தூர் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 48 MSME களில் இருந்து 571 கோடி முதலீடுகளையும் கோவை பெற வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் முன் செய்யப்பட உள்ள ஒப்பந்தங்கள் ஆகும். மாநாடு நடக்கும் நாளில் இதை விட பெரிய அளவில் முதலீடுகள் குவியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்போதும் கோவையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையில் குவியும் முதலீடு; இந்த நிலையில்தான் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், தனது கோரமண்டல் நானோ தொழில்நுட்ப மையத்தை கோயம்புத்தூரில் தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
இது தாவர ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சிகளுக்கு உதவும். நானோ தொழில்நுட்பம் மூலம் வேளாண்துறையில் பல மாற்றங்களை இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த மையம் கோரமண்டலின் ஆறாவது ஆர் & டி மையம் ஆகும், அடுத்த தலைமுறை விவசாய தேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இரண்டாவது தொழில்நுட்ப மையமாகவும் இருக்கும்.
நானோதொழில்நுட்ப மையம், நானோ தயாரிப்புகளின் தொகுப்பு, பயிர்களின், விதைகளின் குணாதிசயம், உயிரியல்பாதுகாப்பு சோதனை ஆகியவற்றிற்கான அதிநவீன R&D பணிகளை மேற்கொள்வதற்கான உயர்தர உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கருவிகளுடன் இந்த மையம் திறக்கப்பட்டு உள்ளது. கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அமைக்கப்பட்டு உள்ள ஆர் அண்ட் ட மையம் கோவையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் கோவை: ஏற்கனவே இந்தியாவில் வளரும் நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் 10 நகரங்களாக உருவெடுத்து உள்ளதாக CREDAI மற்றும் Cushman & Wakefield நிறுவனங்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆகியவைஎகிப்தில் உள்ள 21வது NATCON இல் 'இந்தியாவின் அடுத்த 10 வளர்ந்து வரும் சந்தைகள்: வணிக ரியல் எஸ்டேட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான நிறுவனங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டன.
அந்த வகையில் தற்போது அமைக்கப்பட்டு உள்ள ஆர் அண்ட் டி மையம் கோவையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔸 இந்தூர்
🔸கொச்சி
🔸திருவனந்தபுரம்
🔸கோயம்புத்தூர்
🔸லக்னோ
🔸விசாகப்பட்டினம்
🔸சூரத்
🔸வதோதரா
🔸நாக்பூர்
🔸நாசிக்
ஆகியவை இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ள நகரங்கள் ஆகும்.
-
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications