கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில்.. பூட்டப்பட்ட காரில் இளம்பெண்.. இப்படியொரு காதலா? யாரந்த 3 பேர்?
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இது தொடர்பாக அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 29 வயதாகிறது.. இவருக்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது.. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வந்துவிட்டார். தற்போது தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னொரு நபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி, 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. எனினும், இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியிருக்கிறார். தனித்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, இந்த நபரின் நட்பும், உறவும் ஆறுதலாக இருந்து வந்தது.
கண்ணீர்: ஒருகட்டத்தில், இளம்பெண்ணுடன் பேசுவதையும், பழகுவதையும் அந்த நபர் நிறுத்திவிட்டார். இதனை இளம்பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அந்த நபரை பிரிய முடியாமல் தவித்துள்ளார்... அப்போதுதான் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (28), ஆறுமுகம், சதீஷ் ஆகியோரின் அறிமுகம் பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது. அவர்களிடம் தன்னுடைய காதலன் தன்னிடம் பழகுவதை நிறுத்திவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லி அழுதுள்ளார் இளம்பெண்.
இதைக்கேட்டதும் வருத்தப்பட்ட கார்த்தியும் அவரது நண்பர்களும், "காதலனிடம் எப்படியாவது பேசி உன்னுடன் சேர்த்து வைக்கிறோம்.. 20 லட்ச ரூபாய் தந்தால் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்" என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
பஸ் ஸ்டாப்: இதைக்கேட்டதுமே இளம்பெண்ணுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.. எப்படியாவது காதலன் தன்னுடன் சேர்ந்துவிட்டால் போதும் என்று நினைத்து, முதல் கட்டமாக 10.50 லட்ச ரூபாய் தருவதாகவும், காதலன் தன்னிடம் வந்து சேர்ந்ததுமே மீதமுள்ள பணத்தை தருவதாகவும் சொல்லி உள்ளார்.. அதன்படியே, நேற்று முன்தினம் 10.50 லட்சம் ரூபாய் பணத்துடன், சேரன் நகர் பஸ் ஸ்டாப்புக்கு வந்துள்ளார்.
அங்கே கார்த்தி உட்பட 3 நண்பர்களும் காரில் வந்தார்கள்.. இளம்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு, மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு அழைத்து சென்றனர்... கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது 3 பேரும் இளம்பெண்ணிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர், "என் காதலன் வந்தால்தான் பணத்தை தருவேன்" என்று சொல்லிவிட்டார்..
தப்பி ஓட்டம்: இதைக்கேட்டதும் 3 பேரும் ஆத்திரமடைந்து, கத்தியை காட்டி பெண்ணை மிரட்டினார்கள்.. அவரது கையிலிருந்த ரூ.10.50 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் இருந்து அவரை இறக்கிவிட்டு தப்பிவிட்டார்கள்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கவுண்டம்பாளையம் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. போலீசாரும் இந்த வழக்கை பதிவு செய்து, தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்களாம்..!!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications