அம்மாடி! 1996ல் போலீஸ் கைப்பற்றிய ரூ.400.. 28 வருடங்களுக்கு பின் இப்போ தான் வந்து சேர்ந்து இருக்காம்
கோவை: கோவையில் கடந்த 1996இல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட 400 ரூபாய், 28 ஆண்டுகளுக்குப் பின் இப்போது புகார்தாரரிடம் மீண்டும் தரப்பட்டது.
நமது நாட்டில் லஞ்சம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. மற்ற நாடுகளில் தவறு செய்யத் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் நமது நாட்டில் மட்டும் கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குகிறார்கள்.

இது நமது நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நமது நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கியமான காரணமாகவே இந்த லஞ்சம் மற்றும் ஊழலே இருக்கிறது.
லஞ்சம்: லஞ்சம் வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு எனத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட அதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை என்பதே வேதனை.. அதிலும் பல நேரங்களில் புகார் கொடுக்கும் நபரே எதோ தவறு செய்த நபர் போல அலைக்கழிக்கப்படுவார். பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதன் காரணமாகவே பலரும் புகார் தர முன்வருவதில்லை.
அப்படியொரு சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரூ.400 பறிமுதல் செய்துள்ளனர். அந்தத் தொகை சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் அந்த புகார்தாரரிடம் (இந்த பணத்திற்குச் சொந்தக்காரர்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கதிர்மதியோன்: அதாவது கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் கடந்த 1996ஆம் ஆண்டில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், இந்த சாதாரண வேலைக்கே அப்போதே விண்ணப்பித்த கதிர்மதியோனிடம் 400 ரூபாயை மின்வாரிய அலுவலர் லஞ்சமாகக் கேட்டுள்ளார். கதிர்மதியோன் லஞ்ச உழப்பு துறையிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய அந்த மின்வாரிய அலுவலரைப் பொறி வைத்துப் பிடித்துள்ளனர். அப்போது லஞ்சப் பணமாக கதிர்மதியோன் கொடுத்த ரூ.400ஐ போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அதைத் தடயங்களாக போலீசார் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications