Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நில வகை மாற்றம்.. கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் இதென்ன? ஏற்கனவே அதிமுக, இப்ப இவங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நகர ஊரமைப்பு திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில் நிலவகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தி, அதன்படி திருத்தங்கள் செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும் என்று திமுக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில், நில வகை மாற்றத்தால் கோவை விவசாயிகள், தொழில்துறையினர் தரப்பில் அதிருப்தி கிளம்பியிருப்பதாக தெரிகிறது.

கடந்த 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதலின்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ஒரு நகரமாக கோவை திகழ்கிறது.. இப்போது தொழில் ரீதியாக கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன இதனால் ஏராளமானோர் கோவையில் குடியேறுகிறார்கள்.

Coimbatore Master plan 2041 Kovai Tamil Nadu Government

2041ம் ஆண்டுக்குள் கோவையின் மக்கள்தொகை பல லட்சங்களில் உயரும் என்கிறார்கள்.. எனவே, இத்தனை மக்களுக்கும் தேவையான வசதிகளை கொண்ட நகரமாக கோவையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், கோவைக்காக 2வது முழுமை திட்ட வரைவு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

கோயம்புத்தூர் நகரம்

இதில், கோயம்புத்தூர் நகரம் 2041ம் ஆண்டு 1531 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டன. இறுதியில், கோவை மாஸ்டர் பிளான் 2041 என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார்.

2041ம் ஆண்டில் மதுக்கரை,கருமத்தம்பட்டி ,கூடலூர், காரமடை ஆகிய 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய நகரமாக இருக்கும் வகையிலும், 1531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த நகரம் இருக்கும் வகையிலும் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது..

புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041

அதுமட்டுமல்ல கோவைக்கு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது , வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்றவற்றை உள்ளடக்கிய திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.. குறிப்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தபடி உள்ளார்.

நில வகைப்பாடுகள்

அதேபோல, நில வகைப்பாடுகள் மாற்றப்பட்டுள்ளதற்கு தொழில்துறையினர், விவசாயிகளும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது..

காரணம் இத்திட்டம் தொடர்பான கருத்து தெரிவித்து, விவசாயிகள், தொழில் அமைப்புகள், சமூக பொது நல அமைப்புகள், கட்டுமானத் துறையினர் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 3,100 மனுக்கள் பெறப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை 3ல் இறுதி வரைவு வெளியிடப்பட்டது. ஆனால், அதில், நிறைய தவறுகள் இருப்பதாகவும், திட்ட சாலைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், நிலங்கள் வகைப்பாடுகளும் மாற்றப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள்..

பழைய நிலவகையே வேண்டும்

முக்கியமாக, கோவை - திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில், 80 அடி அகலத்தில் திட்டமிட்டிருந்த வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டம் கைவிடப்பட்டுள்ளது... மேலும், துடியலுார் - குனியமுத்துார் இடையிலான, 150 அடி அகல உள்வட்டச்சாலை (இன்னர் ரிங் ரோடு), வெள்ளக்கிணறு-நீலாம்பூர் 80 அடி உள்வட்டச்சாலை, நகரின் முக்கியச்சாலைகளை இணைக்கும் பசுமை வழித்தடமும் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள், தொழிற்துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, முதல் மாஸ்டர் பிளானில், 257 திட்ட சாலைகள் இடம் பெற்றிருந்த நிலையில், 136 சாலைகளை அமைக்க சாத்தியமில்லை என்பதும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் நில வகை ஏற்கனவே எப்படி இருந்ததோ அதுபோலவே இப்போதும் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+