டிக்டாக் வீடியோ வெளியிட்ட மனைவி கொடூரமாக கொலை.. கோவையில் சந்தேகக் கணவன் வெறிச்செயல்
கோவை: கோவை குளத்துப்பாளையத்தில் டிக்டாக்கில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு வந்த மனைவியை சந்தேகப்பட்டு கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அந்த பகுதியில் சென்ட்ரிங் வேலைகளை செய்து வந்தார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 11வயதில் காவ்யா என்ற மகளும், அஷ்வின் என்ற 5வயது மகனும் இருக்கிறார்கள்.

இதனிடையே நந்தினியும் கனகராஜும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தனியாக வசித்து வந்துள்ளார்கள். நந்தினி அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். நந்தினி டிக்டாக்கில் அதிகமான வீடியோக்களை வெளியிட்டு வந்தாராம். இது தொடர்பாக நந்தினிக்கும் கனகராஜ்க்கும் ஒன்றாக வசித்த போதே பிரச்னை வந்துள்ளது.
இதனிடையே நந்தினி யாருடனோ அடிக்கடி தொலைப்பேசியில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்திலும் கனகராஜ்க்கும் நந்தினிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் கனகராஜ் நந்தினிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் போன் பிஸியாகவே இருந்ததாம்.இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கே சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கரை போலீசார் நந்தினியின் கணவர் கனகராஜை கைது செய்தனர்.
டிக் டாக் வீடியா மற்றும் கணவனின் சந்தேக புத்தியின் காரணமாக ஒரு குடும்பம் முற்றிலும் இப்போது சிதைந்து போய் உள்ளது. மனைவி இறந்து போய்விட்டார் கணவர் சிறைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள இருவரின் நிலையை இருவரும் நினைத்து பார்க்காதது தான் இந்த கொடூரத்தின் சோகம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications