பூப்பெய்திய மாணவி வாசலில் தேர்வெழுத வைத்த விவகாரம்.. பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு
கோவை: கோவை, செங்குட்டைபாளையத்தில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.

ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.
மாணவியை வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்பி. சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், பள்ளி முதல்வரை சஸ்பெண்டு செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு கல்வித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாணவியின் தந்தை சுரேந்திரராஜ் அளித்த புகாரின் பேரில், பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி மற்றும் தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் காவல் துறையினர் பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், மாணவியின் பெற்றோரிடமும் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் தீண்டாமை கொடுமை இல்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில், தற்போது பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் உட்பட மூவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications