கோவைக்கு ஒரு சட்டம்.. கொச்சிக்கு ஒரு சட்டமா.. மெட்ரோ ரயில் விவகாரத்தில் கொதிக்கும் கோவையன்ஸ்
கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செய்தி உண்மையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இருந்தபோதும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதாக புகார் உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தில் கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஒரு மாதிரியான விதியும், கோவைக்கு ஒரு விதியையும் கடைபிடிப்பதாக கொந்தளித்து கோவையில் போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரங்கள் கொண்ட பட்டியலை கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. புனே, கொச்சி, கோவை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்
கொச்சி மற்றும் புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கோவைக்கு மட்டும் கடந்த 14 வருடங்களாக மெட்ரோ ரயில் திட்டம் கானல் நீராகவே உள்ளது. அப்போதிருந்தே இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வேண்டாம் என்று சொல்லி மோனா ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த கடந்த 2017 ஆம் ஆண்டு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.6,683 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்த நிதி ஒதுக்கப்படவில்லை.
திட்டம் நிராகரிப்பா
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அங்கு நீண்ட நாட்களாக ஒப்புதல் வழங்காமல் காத்திருப்பில் இருந்த நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான மக்கள் தொகை கொண்டிருப்பதால் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடியாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவைக்கு ஒரு விதி.. கொச்சிக்கு ஒரு விதியா
இந்த தகவல் கோவை மக்களிடம் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் நகரம் கோவை. இந்திய அளவில் தொழில், கல்வி, மருத்துவம், ஐ.டி துறைகளில் கோவை சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. எனவே கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
கோவை, கொச்சிக்கு ஒரே நேரத்தில் தான் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அடிப்படையில் கோவையை விட கொச்சியில் சற்று குறைவான மக்கள் தான். கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கோவைக்கு மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications