கோவை மேட்டுப்பாளையத்தில் பேஸ்புக் நண்பன்.. ஏழு கடல் ஏழு மலை கடந்து ஜெர்மனி என்ஜினியர் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: பேஸ்புக் நண்பனை பார்க்க ஏழு கடல், ஏழுமலைகள் ,ப ல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வந்துள்ளார் ஜெர்மன் என்ஜினியர். ஜெர்மனியில் வசிக்கும் ஐனீஸ் என்பவரும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வனும் பேஸ்புக் நண்பர்கள்.இவர்கள் இருவரது நட்பை பற்றி தான் இப்போது மேட்டுப்பாளையம் மொத்தமும் பேச்சாக உள்ளது. இப்போது பார்ப்போம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமலஸ்ருதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் கலைச்செல்வன் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளார். அவருக்கு ஏராளமான நண்பர்கள் பலர் உள்ளனர். அவருக்கு பேஸ்புக் மூலம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த என்ஜினியரான ஐனீஸ் என்பவர் நண்பராகி உள்ளார்.

coimbatore Mettupalayam from Germany to visit Facebook friend and gave a pleasant surprise

2 பேரும் வெவ்வேறு நாடுகளில் வசித்து வந்தாலும், அடிக்கடி பேஸ்புக் மெசேஜில் தங்கள் நட்பை பரிமாறி வந்தனர். இருவரும் தங்கள் ஊர் மற்றும் குடும்ப விவரங்களை பற்றி நட்பை வளர்த்துள்ளனர். இந்தநிலையில் தனது பேஸ்புக் நண்பர் கலைச்செல்வனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று ஐனீஸ் எண்ணினார். இதற்காக அவர், ஜெர்மனியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வந்திருக்கிறார். மேட்டுப்பாளையம் வந்த அவர், வாட்ஸ்-அப் செயலி மூலம் நான் உங்கள் ஊரில் தான் இருக்கிறேன் என கலைச்செல்வனை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

உடனே கலைச்செல்வன் தனது இருசக்கர வாகனத்தில் ஐனீஸை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து, குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகன் ஆகியோரை அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். அவர்களுடன் ஐனீஸ் புகைப்படம் எடுத்து, நலம் விசாரித்தார். பின்னர் கலைச்செல்வனுடன் உரையாடும் போது, ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு வரும் வழியில் உங்களை நேரில் பார்க்க வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜெர்மனி வந்தால், அங்கு வேலை வாங்கி கொடுத்து கவனித்து கொள்கிறேன் என்று ஐனீஸ் அக்கறையுடன் விசாரித்துள்ளாராம். மேலும் அவர் தமிழ்நாட்டின் விருந்து உபசரிப்பை பார்த்து நெகிழ்ந்துபோனார். பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய ஒருவர், ஜெர்மன் நாட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து உள்ளூர்வாசியை பார்த்ததை கேட்ட மேட்டுப்பாளையம் மக்கள், ஜெர்மன் நாட்டவரை ஆச்சரியமாக பார்த்தபடி சென்றனர். விருந்து, உபசரிப்புக்கு பின்னர் கலைச்செல்வன், ஜனீஸை மேட்டுப்பாளையத்தில் இருந்து பெங்களூருவுக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார். தற்போது அந்த 2 நண்பர்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+