தாத்தா செய்யற காரியமா இது.. கோவை அருக்காணி பாட்டிக்கு நடந்த சோகம்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக, நாம் தமிழர், பாஜக, தவெக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பயன்படுத்துதல், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. விருதுநகர் இரட்டை கொலை, திருச்சி இளைஞர் கொலை என்று கடந்த சில நாட்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோவையில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் ஒரு முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
கோவை மாவட்டத்திலும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. தடாகம் அருகே கடந்த வாரம் மது குடிக்கும் பஞ்சாயத்தில் இளைஞர் கொலை, மேட்டுப்பாளையம் ஓட்டுநர் கொலை, பன்னிமடை பகுதியில் வீட்டில் புகுந்து கொலை செய்யப்பட்ட பெண் என்று ஏராளமான கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இத்தனை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

மூதாட்டி கொலை
இந்நிலையில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வளையபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி. 80 வயதான அருக்காணி அம்மாள் தனியாகி வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக அருக்காணி வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. நேற்று அவர் வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வந்துள்ளதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது அருக்காணி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கப்பட்டது. அருக்காணிக்கு கருப்பசாமி என்பவருடன் திருமணமாகி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இருந்தாலும் அவர் தனியாக தான் வசித்து வந்துள்ளார். அவ்வபோது மட்டும் வாரிசுகள் வந்து பார்த்து செல்வார்கள்.
முதியவர் கைது
காவல்துறை விசாரணையில் அருக்காணி அம்மாள் வீட்டின் அருகே வசித்து வரும் கோபால் (வயது 65) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அருக்காணி அணிந்திருந்த தங்க மோதிரத்துக்காக கோபால் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கோபாலை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு பவுன் தங்க மோதிரத்தை மீட்டனர். இந்த சம்பவம் கருமத்தம்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications