அம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்
கோவை: கோவையில் உள்ள பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஒரு பச்சை கிளி அம்மன் மீது அமர்ந்துள்ளதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.
பாப்பநாய்க்கன் பகுதியில் அமைந்துள்ள, பிளேக் மாரியம்மன் கோயில், சுற்று வட்டாரத்தில், மிகவும் பிரபலம். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து கோவில் நிர்வாகம் பக்தர்கள் வழிபாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிலையில்தான், பச்சை கிளி ஒன்று, கருவறைக்குள் பறந்து அமர்ந்து, பிளேக் மாரியம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை பார்த்தபடி உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் சிலை போல இந்த காட்சி தென்படுகிறது. அம்மன் சிரித்த முகத்துடன் களையாக அருள்பாலிக்கும் சிலையின் மீது கிளியும் வந்து அமர, அந்த இடமே பக்தி பரவசத்திற்கு உள்ளாகியுள்ளது.
பக்தர்கள் குவிந்து இந்த அற்புதக்காட்சியை பார்த்து வருகிறார்கள். செல்போன்களில் படம் எடுக்கிறார்கள். ஆனால் எந்த சத்தத்திற்கும் அந்த கிளி அசரவில்லை. அம்மன் வலது தோளில் அமர்ந்து இருந்து அசைய மறுக்கிறது.
இந்த தகவலை அறிந்து பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications