Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் அரங்கேறிய 2 கொலைகள்.. இரண்டே நாளில் 33 ரவுடிகள் கைது.. காவல்துறை அதிரடி!

கோவையில் 2 நாட்களில் 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தையடுத்து, கடந்த 2 நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவை நகர்ப் பகுதிகள் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி இருக்கிறது. அங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி இரண்டு இளைஞர்களை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது.

அரிவாள், கத்தியால் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பித்துச் சென்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பது தெரிய வந்தது.

அடுத்தடுத்த பயங்கரம்

அடுத்தடுத்த பயங்கரம்

மாவட்ட நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த 13ம் தேதி ஆவாரம் பாளையம் அருகே இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த சத்திய பாண்டி என்பவரும் ஓட ஓட விரட்டி அடையாளம் தெரியாத கும்பலாம் படுகொலை செய்யப்பட்டார்.

சட்டம் - ஒழுங்கு

சட்டம் - ஒழுங்கு

அடுத்தடுத்து நாட்களில் கோவையின் இருவேறு பகுதிகளில் பயங்கர சம்பவங்கள் அரங்கேறியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல் கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாகவும், கோவை மாவட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். குறிப்பாக அதிமுக, பாஜக கட்சித் தலைவர்கள் சட்டம் - ஒழுங்கு பற்றி கடுமையாக விமர்சித்தனர்.

காவல்துறை நடவடிக்கை

காவல்துறை நடவடிக்கை

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு கொலை சம்பவத்தை அடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் காவல்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டது.

33 ரவுடிகள் கைது

33 ரவுடிகள் கைது

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 33 ரவுடிகள் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கித் திரிந்த குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை, 33 பேரையும் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+