மீண்டும் கோவையில் தாக்குதலா? அதிமுக முன்னாள் எம்.பி சொன்ன பரபரப்பு தகவல் - அதிரடியாக மறுத்த கமிஷனர்!
கோவை : கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அசம்பாவிதம் ஏற்பட இருந்ததாகவும், ஆயுதங்களுடன் ஒருவர் கைதாகியுள்ளதாகவும் அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறிய கருத்தை, கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர் நின்றதாக அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், அதில் தொடர்புடைய நபர் கோவை வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கோவையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை, சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி
அதிமுக முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கடந்த வாரம் ஒரு விசேஷமான நாளில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு நேர் எதிரில் சென்று ஒருவர் கவனித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த நபரைப் பிடித்து விசாரித்தால் அவர் உடம்பு முழுவதும் ஆயுதங்கள். காத்திரமான விசாரணை இருந்திருந்தால் இங்கு சாதாரணமாக வந்து குண்டுகளைத் தயாரித்து உடம்பில் கட்டிக்கொண்டு ஒருவர் உலவ முடியுமா? அங்கிருந்து மங்களூருக்கு குண்டுகளுடன் செல்ல முடியுமா? இதையெல்லாம் நாம் அனுமதிக்க முடியுமா?" எனத் தெரிவித்தார்.

முற்றிலும் தவறான தகவல்
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்த இந்தக் கருத்து குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், இது முற்றிலும் தவறான தகவல். அவரது பேட்டியை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஷாரிக் டி.பி
மேலும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ்அப் எண்ணில் கோவை ஆதி யோகி சிலையின் புகைப்படத்தை டிபியாக வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது அதுபற்றி விசாரணை ஏதும் நடைபெறுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோவை கமிஷனர், தற்போது வரை இது போன்ற தகவல்கள் ஏதும் வரவில்லை. வந்தால் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சிக்னல்
கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதசாரிகளுக்காக காந்திபுரம் சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கோவை மாநகரில் போக்குவரத்தை சரி செய்ய சாலையை கடக்கக்கூடிய பாதசாரிகளுக்கு தனிநேரம் ஒதுக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் சிக்னலில் இது போன்று வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காந்திபுரம் சிக்னலில் பாதசாரிகள் கடக்க சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

டைனமிக் வெஹிகில் செக்கிங்
சாலையை கடக்க கூடிய பொதுமக்கள் அச்சமின்றி வசதியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு ஏற்ப தற்போது இரண்டாவது சிக்னல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சிக்னல்களிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த சிக்னல் திருவிழா நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும். கோவையின் எல்லை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து டைனமிக் வெஹிகில் செக்கிங் நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications