கோவையில் பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த போலீஸ் ஏட்டுக்கு மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வரும் பாலமுருகன் என்பவர், சாய்பாபா காலனி யில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். அங்கு சாலையில் சென்ற பெண்களை புகைப்படம் வீடியோ எடுத்துள்ளாராம். இதை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் 40 வயதாகும் பாலமுருகன் என்பபவர் சாய்பாபா காலனி யில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றுள்ளார் அப்போது அவர், அங்கு டீ குடித்து கொண்டு இருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அங்கிருந்தவர்களை தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றாராம்.

coimbatore police

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காவலர் பாலமுருகனை பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். ஏட்டு பாலமுருகனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் அறிக்கை அளித்தனர். இதை தொடர்ந்து அவர் போலீஸ் ஏட்டு பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தங்க நகை கொள்ளை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 60 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார் என்பவர், கோவை பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓட்டல் மற்றும் மளிகை கடைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு குமாரின் வீட்டில் இருந்து முகமூடி அணிந்த படி 2 பேர் வந்துள்ளார்கள். , வீட்டின் வெளியே இருந்த காரில் ஏறினார்கள். அதை அந்த வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் பார்த்துவிட்டு அருகே சென்றார். உடனே அவர்கள் காரின் கதவை பூட்டினர். அருகில் சென்ற அவர் காரின் கதவில் இருந்த கண்ணாடியை தட்டியுள்ளார். அதை திறக்காமல் உடனே அந்த 2 பேரும் காரில் வேகமாக சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ், மாடிக்கு சென்று பார்த்தபோது குமாரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.

உடனே அவர் தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. அதில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் கைவிரல் ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த குமாரின் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்பியது. இதை தொடர்ந்து போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து 2 பேர் குமார் வீட்டுக்குள் சென்று திரும்பியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+