கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் தனியாக நின்ற கல்லூரி மாணவி.. விசாரணையில் தெரிய வந்த உண்மை
கோவை: கோவை விமானநிலையம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவிக்கு விரும்பத்தகாத சம்பவம் நடந்த பின்னர், கோவை மாநகர் முழுவதும் போலீசார் மிகவும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது கோவை மாநகரில் மகளிர், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதுவாக பிங்க் நிற ரோந்து வாகனங்கள் ரோந்து செல்கின்றன. அப்படி பெண் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடந்த ரோந்தில், காந்திபுரம் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தவித்த கல்லூரி மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகரம் மிகப்பெரிய அளவில் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கல்லூரிகள் நகரம் என்று அழைக்கும் அளவிற்கு கோவை முழுக்க கல்லூரிகள் உள்ளன. ஏராளமான வெளிமாவட்ட கல்லூரி மாணவ, மாணவியர் அறை எடுத்து தங்கி படிக்கிறார்கள்.

இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், வடமாநில மாணவ மாணவிகளும் கோவையில் உள்ள பிரபல கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். கோவையில் இவர்களுக்காகவே பீளமேடு, சரணவம்பட்டி, கோவை புதூர், துடியலூர், சிட்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிஜி, ஹாஸ்டல்கள் அதிக அளவில் உள்ளன. இதுதவிர இந்த பகுதிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் வீடு எடுத்தும் தங்கி படித்து வருகிறார்கள்.
கோவையில் கல்லூரிகள் அதிகம்
இது ஒருபுறம் எனில், ஐடிநிறுவனங்களும் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதால், இளம் பெண் என்ஜினியர்கள் பலர் அறை எடுத்து தங்கி கோவையில் வேலை செய்து வருகிறார்கள். அப்படி வேலை செய்யும் பெண்கள், படிக்கும் பெண்கள் சிலர் காதலர்களுடன் வெளியில் செல்வதையும் சர்வ சாதாரணமாக காண முடியும். இந்நிலையில் கோவை விமானநிலையம் அருகே இரவில் காதலனுடன் காரில் அமர்ந்த பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை, 3 வாலிபர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப்பிடித்து கைது செய்தார்கள்.
கமிஷனரின் பிங்க் ரோந்து திட்டம்
இதைத்தொடர்ந்து கோவை மாநகரில் மகளிர், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய யுக்திகளை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கையாண்டார். இதன்படி, கடந்த 15-ந்தேதி 'பிங்க்' நிற ரோந்து போலீஸ் வாகனங்களை கமிஷனர் சரவணசுந்தர் தொடங்கி வைத்தார். இதன்படி பிங்க் நிற வாகனங்களில் போலீசார் இரவு முழுவதும் இருளான பகுதி, பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்ஐ கவிதா ரோந்து
கோவை காட்டூர் சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இரவில் பிங்க் நிற வாகனத்தில் ரோந்து சென்றார்கள். அப்போது காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே 19 வயது இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த பெண்ணிடம், ஏன் இங்கு தனியாக நிற்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
19வயது கல்லூரி மாணவி
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. அவர் வீட்டில் செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டு வந்ததாகவும், கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து நின்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் அறிவுரை
இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அந்த பெண்ணை மீட்டு கவுண்டம்பாளையம் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தார். இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் விரைந்து வந்தனர்.அவர்களிடம், இளம்பெண்ணை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் மாணவியிடம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications