பல பெண்களுடன் பழகிய கோயம்புத்தூர் அரசியல்வாதி.. வசமாக சிக்கி அசிங்கப்பட்டு! கோவையில் பெரிய அதிர்ச்சி
கோவை: கள்ள உறவுகள் அதிகரித்து வரும்நிலையில், அது தொடர்பான குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.. இதனால் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்டவர்களின் உலகமறியா குழந்தைகள் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.. கள்ளக்காதலுக்கும், அதனால் ஏற்படும் குற்ற சம்பவத்துக்கும், அரசியல்வாதிகூட விதிவிலக்கல்ல என்பதைதான் மீண்டும் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான செயல் கோவை மாவட்டத்தில் நடந்துள்ளது.
துடியலூர் பன்னிமடை அருகே உள்ளது தாளியூர்.. இங்கு வசித்து வருபவர் கவி சரவணக்குமார் (எ) கவி சரவணன்.. இவருக்கு 51 வயதாகிறது..தீவிரமான அதிமுக பிரமுகரான இவர், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்..

கோவை அரசியல்வாதி
இப்போது கோவை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவராக பதவி வகித்து வருகிறார்.. இதனால் சுற்றுவட்டார அரசியலில் இவர் பிரபலமான அரசியல்வாதியாகவும் வலம் வருபவர்..
இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சஞ்சய் (19) என்ற மகனும், நேத்ரா (15) என்ற மகளும் உள்ளனர். சஞ்சய், கல்லூரியில் 2ம் ஆண்டும், நேத்ரா 10ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்..
ஆனால், சரவணக்குமார், மகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருமே பிரிந்துவிட்டனர்.. இதனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவி சரவணக்குமார், கோவை வடவள்ளி பகுதியில் தனியாகவே வீட்டை எடுத்து, தங்கியிருந்தார்.
மகேஸ்வரிக்கு என்னாச்சு
இந்நிலையில், கடந்த அக்டோபர் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டார்.. உடனே மகேஸ்வரியின் கார் டிரைவர் சுரேஷ் (49) என்பவர், மகேஸ்வரியை தான்தான் கத்தியால் குத்தி கொன்றதாக கூறி வடவள்ளி போலீசில் சரணடைந்தார்.
சம்பவம் நடந்தது தடாகம் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால், தடாகம் போலீசார் கார் டிரைவர் சுரேஷை அதிரடியாக கைது செய்து விசாரணைக்கும் உட்படுத்தினார்கள்... அப்போது சுரேஷ் தந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
கவி சரவணக்குமாரிடம் கடந்த 15 வருடங்களாக கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறாராம் சுரேஷ்.. ஆனால், கருத்து மோதலால் மகேஸ்வரியை விட்டு பிரிந்து, தடாகம் பகுதியில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தார். இதனால் தம்பதிக்கு இடையே மேலும் கருத்து வேறுபாடு அதிகமானது..
டிரைவர் தந்த வாக்குமூலம்
கடந்த 28ம்தேதி காலையில் தாளியூர் வீட்டுக்கு சென்ற சுரேஷ், கருத்து வேறுபாடுகளை மறந்து, கணவரை சரவணக்குமாரை அழைத்து பேசுமாறு மகேஸ்வரியிடம் சொன்னாராம்.. இதைக்கேட்டதும் மகேஸ்வரிக்கு கோபம் வந்து, சுரேஷை கடுமையாக திட்டியிருக்கிறார்..
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் போர்டிகோ டிராயரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகேஸ்வரியின் கழுத்தில் குத்தி கொன்றுவிட்டாராம். இந்த வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தாலும், உண்மையிலேயே மகேஸ்வரியை கொன்றதற்கு அதுதான் காரணமா என்று சந்தேகம் அடைந்தனர். எனவே அந்த பகுதி மக்களிடம் இதுதொடர்பான விசாரணையை விரிவுபடுத்தியபோது, மகேஸ்வரியை, கவி சரவணக்குமாரே கொன்று, பழியை டிரைவர் சுரேஷ் மீது போட்டுவிட்டார் என்று மகேஸ்வரியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
சிசிடிவி கேமராக்கள் நிறுத்தம்
இதையடுத்து போலீசார், மகேஸ்வரியின் வீட்டு பக்கத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய முற்பட்டனர். ஆனால், கொலை நடந்த தினத்தில் சிசிடிவி கேமராக்கள் அனைத்துமே நிறுத்தப்பட்டிருந்தன..இதனால் போலீசார் சுரேஷின் செல்போனை ஆராய்ந்தனர்.. அதில், மகேஸ்வரியை கொலை செய்வதற்கு முன்பு, கவி சரவணக்குமாரிடம் சுரேஷ் பேசியிருந்தது தெரியவந்தது... இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பிறகு மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்ட சுரேஷை தடாகம் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், வேறொரு வாக்குமூலத்தை போலீசாரிடம் சுரேஷ் சொன்னார்.
பல பெண்களிடம் தகாத உறவு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார் கவி சரவணக்குமார்.. இதனால் பல ஊர்களுக்கு சென்று வந்துள்ளார்.. அப்போது பல பெண்களிடம் தகாத உறவிலும் இருந்து வந்துள்ளார்.இப்படி பல பெண்களிடம் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், இது மகேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது.. இதுதான் தம்பதி இடையே தகராறு வெடிக்க காரணமாக அமைந்துள்ளது.. இனிமேல் எந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டேன் என்று மகேஸ்வரிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டுள்ளார்.. ஆனாலும் மீண்டும் மீண்டும் பல பெண்களுடன் உறவு வைத்து வந்துள்ளார் கவி சரவணக்குமார்.
செங்கல் சூளை - தனி வீடு
அதுமட்டுமல்ல, இதற்காகவே வடவள்ளியில் கடந்த 5 வருடங்களாக தனியாக வீடு எடுத்து, அந்த பகுதியை சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.. இந்த விஷயமும் மகேஸ்வரிக்கு தெரிந்துவிட்டதால், கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் கணவர் விவாகரத்து தர மறுத்துவிட்டார்.. அத்துடன் மகேஸ்வரியை ஒரேடியாக கொலை செய்துவிடலாம் என்றும் முடிவெடுத்தார். இதற்காக தன்னிடம் 15 வருடங்களாக டிரைவராக வேலைபார்த்து வந்த சுரேஷை பயன்படுத்தினார்..
மகேஸ்வரியை கொன்றுவிட்டால், கோர்ட், கேஸ் செலவை தான் பார்த்துக்கொள்வதாகவும், வேடசந்தூரில் தன்னுடைய பெயரிலுள்ள செங்கல் சூளையை எழுதி தந்துவிடுவதாகவும் சுரேஷூக்கு சொல்லி உள்ளார்.
2 பேருக்குமே ஜெயில்
உடனே இதற்கு ஒப்புக்கொண்ட சுரேஷ், கவி சரவணக்குமார் சொல்லித்தந்தபடியே, மகேஸ்வரியின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் குத்தி கொன்றுள்ளார். மகேஸ்வரி இறந்துமே, கவி சரவணக்குமாரிடம் சென்று விஷயத்தை சொல்லி உள்ளார். இறுதியில் சுரேஷை போலீசில் கைதாகும்படி செய்திருக்கிறார் கவி சரவணக் குமார் என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார், கவி சரவணக்குமாரை 2வது கொலையாளியாக சேர்த்து, கைது செய்துள்ளனர்.. இப்போது இருவருமே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொண்டாட்டியை கொன்றவைனை..
மகேஸ்வரியை டிரைவரை வைத்து கொன்ற கவி சரவணக்குமார், சடலத்தை பார்த்ததும் கதறி கதறி அழுது நடித்தாராம்.. தன்னுடைய பிள்ளைகளிடம், என் பொண்டாட்டியை கொன்ற சுரேஷை சும்மா விடக்கூடாது என்றெல்லாம் கதறி கூச்சல் போட்டாராம்..ஆனால், கவி சரவணக்குமாரின் இந்த ஓவர் ஆக்டிங்தான் அவரை அங்கிருந்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை தந்துள்ளது.. இவர்கள் போலீசில் தந்த தகவலின் அடிப்படையில்தான், கவி சரவணக்குமார் வசமாக சிக்கியிருக்கிறார்...!!
-
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்!












Click it and Unblock the Notifications