கோவை சாய்பாபா காலனி போக்குவரத்து பிரச்சனைக்கு விடிவு காலம்.. மேம்பாலம் பணியில் அதிரடி மாற்றம்
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது. மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்வதற்காக சாய்பாபாகாலனி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பிருந்ததைவிட அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சாய்பாபாகாலனி மேம்பாலம் பணிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டம் தொழில், கல்வி, மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்டி வருகிறது. ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக எல்லா பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

கோவை போக்குவரத்து நெரிசல்
இதை சரி செய்யும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமான அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.
ஆனாலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சரியாகவில்லை. போக்குவரத்து பிரச்சனையை சரி செய்வதற்காக கோவையின் முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா அமைப்பது, யூடர்ன்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் ஆக்கபூர்வமான தீர்வுகள் கிடைக்கவில்லை.
மேட்டுப்பாளையம் சாலை
இந்நிலையில் கோவையின் மையப் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே உள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பிரதான சாலை, சந்தை மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக ஜி.என். மில்ஸ், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஏற்கனவே மேம்பாலம் திறக்கப்பட்டது. அது புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்தாலும், மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. முக்கியமாக சாய்பாபாகாலனி தொடங்கி ஜிஎன் மில்ஸ் வரை கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சாய்பாபா காலனி மேம்பாலம்
இதையடுத்து சாய்பாபா காலனி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சரி செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி அழகேசன் சந்திப்பு பகுதியில் தொடங்கி எருகம்பெனி வரை சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு, ரூ.71 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த வருடம் தொடங்கியது.
16.6 மீட்டர் அகலம், 975 மீட்டர் நீளம் அளவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 30 மீட்டர் இடைவெளியில் 23 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மேம்பால பணிகளை காரணம் காட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் சிரமம்
இதனால் அந்தப் பகுதி மக்கள் தினம் தினம் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பணிகள் எப்போது முடியும் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மாநகரின் மையப் பகுதியில் இருப்பதால் பிரித்து பிரித்து தான் மேம்பாலம் கட்டி வருகிறார்கள். 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏராளமான மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டதைவிட விரைவாக பணிகள் முடிய வாய்ப்புள்ளது.
குட் நியூஸ்
அதாவது 2026 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவே பணிகளை முடித்து, மேம்பாலத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாய்பாபாகாலனியில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications