பத்திரத்தை வைத்து பலே மோசடி.. ரூ. 14 கோடியை சுருட்டிய கோவை அம்மா, மகன் கைது
கோவை: கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதியில் ஈமு கோழி, மண்ணுளி பாம்பு, எம்எல்எம் உள்ளிட்ட பல நூதன மோசடி அதிகளவு நடைபெறும். இதை வைத்து சதுரங்க வேட்டை என்ற படமே வெளிவந்தது. இப்போதும் கூட அந்தப் பகுதிகளில் பல நூதன மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரை ஏமாற்றி கோவை தாய், மகன் பல கோடிகளை சுருட்டி காவல் துறையிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி ஆதிகேஷ் கோவை மாநகர குற்றப் பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சுனிதா மனோஜ் மற்றும் அவரின் மகன் ஆசிஷ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

5 ஏக்கர் நிலம்
வள்ளி ஆதிகேசுக்கு சொந்தமாக பட்டுக்கோட்டையில் சுமார் 5.64 ஏக்கர் பரப்பளவிலான சொத்து உள்ளது. அவரிடம் உள்ள ஒரே சொத்து அதுதான். இதனிடையே அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற முயற்சித்து வந்துள்ளார். அப்போதுதான் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவரின் மனைவி சுனிதா அறிமுகம் ஆகியுள்ளார்.
சுனிதா மற்றும் அவரின் மகனுக்கு சொந்தமான சென்னையில் எஸ்.வி ஷிப்பிங் லிமிட்டெட் என்ற நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக சுனிதா, ஆதிகேசிடம் கூறியுள்ளார். கூடவே வள்ளி ஆதிகேசையும் நிறுவனத்தின் ஒரு இயக்குநராக அமர்த்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
ஆசை வார்த்தை
அவர்களின் சதி வலை தெரியாமல் வள்ளி ஆதிகேசும் இதற்கு சரி என்று கூறியுள்ளார். இதையடுத்து சுனிதா தரப்பில், ஆதிகேசிடம் உங்கள் சொத்தின் அசல் பத்திரத்தை கொடுங்கள். அதை வைத்துக் கொண்டு உங்களுக்கு ரூ.5 கோடி பணம் தருகிறோம். நிறுவனத்தின் இயக்குநர் என்ற அடிப்படையில் உங்களுக்கு பங்கும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்காக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆதிகேசிடம், சுனிதா பல்வேறு ஆணங்களில் கையொப்பம் வாங்கியுள்ளனர். நிறுவனத்தில் இயக்குநராக சேர்த்து கொள்வதற்கான இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக ஆதிகேசை நம்ப வைத்துள்ளனர். ஆனால் ஆதிகேசுக்கு சொன்னபடி பணமும் தராமல், பங்கும் தராமல் அம்மாவும், மகனும் பலே மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ. 14 கோடி மோசடி
ஆதிகேசை சில நாட்கள் மட்டுமே நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் வைத்தவர்கள், அதே டிசம்பர் மாதம் அவரை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த தகவல் ஆதிகேசுக்கு சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஆதி, நிறுவனத்தில் இயக்குனராக இருப்பது போல போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர். அந்த ஆவணங்கள் மூலம் சென்னை தனியார் வங்கியில் சுனிதாவின் மகன் ஆசிஷ் பெயரில் ரூ.14.90 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த தகவலும் ஆதிகேசுக்கு தெரியவில்லை. ரூ.14 கோடி கடன் பெற்றவர்கள், அதற்கான தவணை தொகையை முறையாக செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.
கைது
இதுதொடர்பாக வள்ளி ஆதிகேஷ், சுனிதாவிடம் கேட்டதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாமதித்து வந்துள்ளனர். இதனால் ஆதிகேஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுனிதா மற்றும் அவரின் மகன் ஆசிஷ் ஆகியோரை கைது செய்தனர்.
-
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட் -
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications