கோவையின் அடையாளமாகும் செம்மொழி பூங்கா.. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
கோவை: கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை கடந்த 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறு சிறு பணிகள் நிறைவடையாததால் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதால் நாளை முதல் (வியாழக்கிழமை) பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
செம்மொழி பூங்கா சிறப்பம்சங்கள்
இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.
மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பணை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவுவாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதி
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
இந்தப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 25 ம் தேதி திறந்து வைத்தார். சிறு சிறு பணிகள் நிறைவடையாமல் இருந்த நிலையில், பணிகள் நடைபெற்று வந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பூங்கா பொது மக்கள் பயன்பாட்டிற்கு வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ. 15, குழந்தைகளுக்கு (10 வயதிற்குட்பட்டோர்) ரூ. 5, நடைபாதை உபயோகிப்போருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ. 100, கேமராவிற்கு ரூ. 25, வீடியோ கேமராவிற்கு ரூ. 50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ. 25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ. 2,000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்காவானது காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications