கள்ளக்காதல் மோகம்.. 3 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
கோவை: கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையைக் கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சமீபகாலமாக கள்ளக்காதல், கள்ளக்காதலுக்காக கொலை போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை விஷம் வைத்து தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்தவர் ரூபினி. இவரது கணவர் சேவூரைச் சேர்ந்த பால்ராஜ். கணவன், மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது 3 வயது குழந்தையுடன் ரூபினி வெள்ளியங்காட்டில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ரூபினிக்கும், சற்குணம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து, ரூபினியும், சற்குணமும் கரட்டுமேடு பகுதியில் தனிமையில் சந்திப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையைக் கொன்றுவிடலாம் என்று முடிவு எடுத்து, பிஸ்கட்டில் விஷம் வைத்தும், குழந்தையின் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு 3வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஏ.கே.பாபுலால் தடையத்தை அழித்ததற்காக 7 ஆண்டுகளும், குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications