கோவை சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடியாக சஸ்பெண்ட்.. விசாரித்தால் மிகப்பெரிய வில்லங்கம்
கோவை: கோவை அருகே பல கோடி ரூபாய் செங்காந்தள் மலர் விதைகள் திருட்டு போன விவகாரத்தில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை சுமார் ரூ.30 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சிங்கநல்லூரை ஒட்டியுள்ள ஒரு குடோனில் செங்காந்தள் மலர் விதைகள் அடிக்கடி திருடு போனதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட சிலரை பிடித்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். அதில் அங்கு பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் யூசூப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் சேர்ந்து லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்து விட்டு, கைதானவர்களிடம் இருந்து மீட்ட பணத்தை குறைவாக கணக்கு காட்டியதாக கோவை மாநகர கமிஷனருக்கு ரகசியமாக புகார்கள் பறந்தது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், முதற்கட்டமாக அவர்கள் 2 பேரும் கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் யூசுப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர், திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் இருந்து மீட்ட பணத்தில் ரூ.30 லட்சம் வரை கையாடல் செய்ததும், அந்த பணத்தை குறைத்து கணக்கு காட்டி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதை தொடர்ந்து அந்த பணத்தை 2 பேரிடம் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
இந்த விசாரணை அறிக்கையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் உயர் அதிகாரிகள் அண்மையில் சமர்ப்பித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் யூசுப், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பணம் கையாடல் விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் கோவை மாநகர போலீஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications