கோவையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.. எஸ்பி செந்தில் குமார் அதிரடி கைது
கோவை: கோவையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் புஷ்பா குமாரி மற்றும் எஸ்பி செந்தில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று எஸ்பி செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் 45 வயதான பெண் காவலரை அலுவலக அறையில் வைத்து உயர் அதிகாரி ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட் பிரிவில் எஸ்.பி அந்தஸ்தில் செந்தில் குமார் என்ற அதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார்
இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக உதவி ஆய்வாளர் புஷ்பா குமாரி என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் கடத்தல், பாலியல் வன்கொடுமை என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலரை கடந்த அக்டோபர் மாதம் அலுவலகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு உதவி ஆய்வாளர் ஒருவரும் அதிகாரிக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பெண் காவலரிடம் எஸ்.பி தவறாக நடக்க முயன்ற போது, அவர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்றதாகவும், அதன்பிறகு உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு அவர் மூலமாக பெண் காவலரை மீண்டும் அலுலக அறைக்கு வரசொல்லி பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
உதவி ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று கூறியும், உதவி ஆய்வாளர் அந்த பெண் காவலரை கமாண்டண்ட் அலுவலத்தில் விட்டு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக செந்தில் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஏற்கனவே, விசாகா கமிட்டி மற்றும் உள்விசாரணைக்குழுவிடமும் புகாரளித்து இருந்ததாகவும் அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்புமணி கண்டனம்
இந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
கண்காணிப்பாளர் நிலை அதிகாரியான செந்தில் குமார் மீது 45 வயது பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசுப் பேருந்தில் கோவைக்கு பயணிக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்த காவலரை கல்லூரி மாணவி ஒருவர் காலணியால் அடித்த நிகழ்வு நடந்திருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாட வேண்டும் என்றால் அதற்கு காவல்துறை தான் கவசமாக இருக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்வதைப் போல காவல்துறையினரே பாலியல் தொல்லை கொடுத்தால் பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகி விடும். தமிழ்நாட்டில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications