கோவை மாணவி பலாத்கார வழக்கு: சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த தனியார் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வெளியூரைச் சேர்ந்த 20 வயதான அவர், கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒண்டிப்புதூரில் உள்ள 25 வயது இளைஞர் அவரின் ஆண் நண்பராக உள்ளார்.

ஆண் நண்பருக்கு சிகிச்சை
கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் அருகில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினார்கள். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரின் ஆண் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
7 தனிப்படைகள்
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 இளைஞர்களை வெள்ளகிணறு பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 பேர் சுட்டுப் பிடிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக மகளிர் ஆணையத் தலைவர் குமாரியும் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ள மூன்று பேரிடம் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
கோட்டாட்சியர் விசாரணை
பிடிக்கப்பட்ட மூன்று பேரும் தற்பொழுது கோவை அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மூன்று பேரிடம் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் 3 நபர்களுடன் விசாரணை மேற்கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பதிலளிக்காமல் புறப்பட்டார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications