ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு- பெரியார் தி.க. நூதன போராட்டம்
கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி வர எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.
கோவை: சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக நாளை தமிழ்நாடு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை வழிபடுகிறார் திரவுபதி முர்மு. மதுரையைத் தொடர்ந்து கோவை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை ஈஷா யோகா மையம், அரசு விருந்தினர் மாளிகை, கோவை சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து வாகன ஒத்திகையும் இன்று நடைபெற உள்ளது. கோவையில் சனிக்கிழமை இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி தங்குகிறார்.

இதனிடையே கோவை ஈஷா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க.வினர் நேற்று கோவையில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தந்தை பெரியார் தி.க. நிர்வாகிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையை, யானை வழித்தடங்களை பழங்குடி மக்களின் வாழ்வை, விவசாய நிலங்களை சூறையாடி யோகா என்ற பெயரில் பல உயிர்களை காவு வாங்கியும், பல மர்ம மரணங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள அதுவும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்ட ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது . அவர்கள் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு அரசே அங்கீகாரம் வழங்குவது போன்று அமைகிறது என்றனர்.
மேலும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி திரவ்பதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் நிர்வாகிகள் இணைந்து கொண்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications