இது தான் சரியான கிஃப்ட்.. புதுமணதம்பதிக்கு சப்ரைஸ் தந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.. வைரல் சம்பவம்
கோவை: கோவை குறிச்சி பிரிவு பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களிலும் மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தக்காளி
இப்படி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி வரத்து குறைந்தன. இதனால் பல பகுதிகளிலும் காய்கறி விலை அதிகரித்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தக்காளி விலை 150 ரூபாய் வரை விற்பனையானது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரூ 100 கடந்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

என்ன காரணம்
மழையை பயன்படுத்தி வியாபாரிகள் அதிக விலைக்கு தக்காளியை விற்பனை செய்வதாகவும் இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இதை மறுத்த வியாபாரிகள் தக்காளி வரத்து குறைந்ததே விலை ஏறியுள்ளதாகவும் மழை நின்றால் சில நாட்களில் விலை குறைந்துவிடும் என தெரிவித்தனர். மேலும், கனமழையால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகிப் போகும் நிலை உருவாகியுள்ளதாலேயே விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழக அரசு
வெளிசந்தையில் 150 - 160 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 85 விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல குறிப்பிட்ட ரேசன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னரே தக்காளி விலை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.

விஜய் மக்கள் இயகத்தினர்
இந்தச் சூழலில் கோவை குறிச்சி பிரிவு பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணை தலைவராக இருப்பவர் மகேஷ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தக்காளி பரிசு
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
-
நகைக்கடன் 5 சவரன் பற்றி ஏன் பேசல விஜய்? பயிர்க்கடன் தள்ளுபடியிலும் பல சிக்கலா? ரிசர்வ் வங்கி செக் -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications