கோவை இருகூரில் நடந்தது என்ன?.. சாலையில் அலறிய பெண் போலீஸிடம் பேசிய அதிர்ச்சி ஆடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை இருகூர் அருகே பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியாகியிருந்தது. இந்த சம்பவத்தின்போது பெண் அலறியது பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்தது. காரின் எண் தெளிவாக பதிவாகாததும், கடத்தல் தொடர்பாக யாரும் புகார் அளிக்காத காரணத்தினாலும் அங்கு என்ன நடைபெற்றது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் அந்த காரில் நடந்ததை பார்த்து, சாலையில் சத்தம் போட்டு உதவி கேட்ட பெண் காவல்துறையிடம் கூறிய ஆடியோ வெளியாகியுள்ளது.

கோவை இருகூர் ஏஜி புதூர் தீபம் நகர் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் ஒரு பெண் காரில் கடத்தி செல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு பெண் அலறல் சத்தம் கேட்க, அங்கிருந்த வெள்ளை நிற கார் வேகமாக செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குடும்பப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்த சம்பவமா அல்லது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

coimbatore-what-happened-in-irugur-witness-shared-shocking-details-to-police

இருகூர் பெண் கடத்தல் சிசிடிவி

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை 4 தனிப்படைகள் அமைத்துள்ளது. பெண் கடத்தல் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று காவல் ஆணையர் கூறியிருந்தார். கோவை விமான நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தின் போது அங்கு நேரில் இருந்து சத்தம் போட்ட பெண், அங்கு நடந்தது குறித்து போலீஸாரிடம் சொல்லிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண், "நான் எலக்ட்ரானிக் கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். நேற்று மாலை 6.30 மணியளவில் அலுவலகம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தேன். பவர்ஹவுஸ் அருகே உள்ள காலி இடத்தில் நான் வந்ததற்கு எதிர் திசையில் ஒரு வெள்ளை நிற கார் இருந்தது.

கழுத்தை நெரித்து

காரில் டிரைவர் இருக்கையில் வெள்ளை சட்டை அணிந்து ஒரு ஆணும், அவர் அருகில் நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் இருந்தனர். அவர் பிங்க் நிற சுடிதார், வெள்ளை நிற ஷால் போட்டிருந்தார். டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் பெண்ணின் கழுத்தை பிடித்து நெரித்து அடித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் வலியில் கத்தினார். அங்கு இருட்டாக இருந்ததால் எனக்கு பயம் வந்துவிட்டது. அந்த வழியாக சென்ற வண்டிகளை நிறுத்தி உதவி கேட்பதற்கு கைக்காட்டினேன் யாரும் நிறுத்தவில்லை.

ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண் நிறுத்தினார். அவரிடம் விபரங்களை சொன்னபோது, அதற்கு ஆண்களை தானே உதவி கேட்க வேண்டும். என்னை ஏன் நிறுத்தினீர்கள் என்று கேட்டார். ஒருகட்டத்தில் அவரும் என்னுடன் சேர்ந்து உதவி செய்ய முயற்சித்தார். ஆனால் அந்த காரில் பின் சீட்டிலும் ஒருவர் இருந்துள்ளார். அதை நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. கதவும் திறந்திருந்தது. நான் கத்தி கூச்சலிட்ட பிறகு கதவை சாத்திவிட்டு வண்டியை வேகமாக எடுத்து கிளம்பிவிட்டனர்.

குடும்ப பிரச்சனையா

பிறகு நாங்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்த என் கணவரிடம் கூறினேன். அவர் ஏதாவது குடும்ப பிரச்சனையாக இருக்கும் என்று கூறினார். அதனால் நானும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நினைக்கவில்லை. கத்தினால் யாராவது நிற்பார்கள் என்று நான் கத்தினேன். ஆனால் நிற்கவில்லை. அந்த காரில் இருந்தவர்கள் சுதாரித்து கிளம்பிவிட்டனர்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+