ஜெகஜால கில்லாடிகள்.. கால்டாக்ஸியில்தான் வருவாங்க.. பட்டப்பகலில் எல்லார் முன்பும் பெண்கள் செய்த வேலை
கோவை: கோவையில் இளம்பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.. அப்படி என்ன நடந்தது கோவை மசக்காளிபாளையத்தில்?
கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள செங்குட்டை வீதியை சேர்ந்தவர் சதாசிவம்.. 60 வயதாகிறது.. இவர் அந்த பகுதியில் ஆவின் பால் முகவராக செயல்பட்டு வருகிறார்.
என்ன நடந்தது: இவர்களுக்கு செங்குட்டை வீதியிலேயே சொந்த வீடு உள்ளது.. அதனால், மனைவி, மகனுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இதில், மகனும், மனைவியும் வேலைக்கு வேலைக்கு செல்பவர்களாம். அப்படித்தான், கடந்த 24-ந் தேதி, சதாசிவமும், அவரது மனைவியும் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.

கடைசியாக இவர்களது மகன், வீட்டை பூட்டி விட்டு, சாவியை வழக்கம்போல், வாசற்படியில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பணம் தரவேண்டியிருந்ததால், வீட்டுக்கு பணத்தை எடுக்க வந்தார். அப்போது பீரோவை பார்த்தால், 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் அங்கே இல்லை. மேலும், பீரோவில் இருந்த பொருட்களும் இடம்மாறி இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் சதாசிவம்.
கேமராவில் உருவம்: இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் புகாரின் பேரில் தனிப்படை அமைத்து, இது தொடர்பாக விசாரணையை துவங்கினர்.. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அப்போது, ஒரு பெண் சதாசிவம் வீட்டிற்குள் சென்றுவிட்டு, மறுபடியும் வெளியேறுவது பதிவாகியிருந்தது.
எனவே, அந்த பெண்ணின் அடையாளத்தை வைத்து, அவர் யார் என்று விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் அந்த பெண், கரூர் வெங்கமேட்டை சேர்ந்த ரமணி என்பது தெரியவந்தது. இவருக்கு 33 வயதாகிறது.. இவரது தோழி பெயர் வினையா. அவருக்கும் 33 வயதாகிறது. 2 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது.. இதையடுத்து ரமணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை ஆரம்பமானது.

வாக்குமூலம்: ரமணி சொல்லும்போது, என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவே திருட ஆரம்பித்தேன்.. அதுவே பழகிவிட்டது. ஒருமுறை கொள்ளை வழக்கில் கைதாகி கோவை ஜெயிலுக்கும் சென்றிருக்கிறேன். அப்போதுதான், போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த வினையாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து, அவரை நான்தான் ஜாமீனில் வெளியே எடுத்தேன்.
நோட்டமிடுவோம்: பிறகு 2 பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தோம். நாங்கள் வீட்டை வாடகைக்கு கேட்க செல்வது போலவும், வேலை கேட்டு செல்வது போலவும், சொந்தக்காரர் வீட்டை தேடி வந்தது போலவும் சொல்லிவிட்டு, அந்தந்த பகுதியை நோட்டமிடுவோம். திறந்திருக்கும் வீடுகளில் கைவரிசை காட்டுவோம்.. ஒருவேளை திருடும்போது யாராவது வந்து விட்டால் அதற்கேற்றவாறு நாடகமாடி, அனைவரையும் நம்பவைத்து தப்பித்துவிடுவோம்.
நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.. வழக்கமாய் பகலில்தான் திருடுவோம். அப்படித்தான், வீடு வாடகைக்கு கேட்டு செல்வது போல மசக்காளிபாளையம் பகுதியில் நோட்டமிட்டோம். அப்போது சதாசிவம் வீட்டினர், வீட்டை பூட்டி விட்டு சாவியை பெட்டிக்குள் மறைத்து வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டோம். இதற்காகவே நாங்கள் கால் டாக்சியில் கிளம்பி வந்து தினமும் நோட்டமிட்டு போனோம்..

சதாசிவம்: நான் சதாசிவம் உள்ளே போய் திருடும்போது, வினையா காரில் கால் டாக்சியில் உட்கார்ந்திருந்தார்.. நான் மட்டும் காரில் இருந்து இறங்கி சென்று சாவியை எடுத்து கதவை திறந்து, உள்ளே போய் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்துவிட்டேன். 15 சவரன் நகையில் பாதியை, வினையாவுக்கு தந்துவிட்டேன்.
வினயாவும் தனக்குரிய நகையை, கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில், அவருடைய அடையாள அட்டையை காண்பித்து விற்றுவிட்டார்.. ஆனால், நான் கொள்ளையடித்த நகைகளை, என்னுடைய சித்தி ஜெயந்தியிடம் தந்துடுவிடுவேன். உடனே அவர் அவைகளை பணமாக மாற்றிவிடுவார். இப்படியே நாங்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்" என்றார் ரமணி.இந்த விசாரணையின்போதுதான், ரமணி மீது கரூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் பதிவாகி உள்ளதாம்..
தோழிகள்: 10 வருடமாகவே கைதேர்ந்த கொள்ளைக்காரியாக மாறியிருக்கிறார். இவர்களிடமிருந்த சதாசிவத்தின் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு தோழிகள் 2 பேரும் ஜெயிலில் உள்ளார்கள்.. ஆனால், ரமணியின் ஆண்ட்டி "ஜெயந்தி"யை காணவில்லையாம். அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலீசார்.
-
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications