உஷார்..வாட்ஸ்ஆப்பில் வந்த ஆப்பு! லிங்கை தொட்டவுடன் கடன் வாங்கியதாக மெசேஜ்! கதறித் துடித்த கோவை பெண்!

Subscribe to Oneindia Tamil

கோவை : மொபைலில் வாட்ஸ்ஆப்புக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் தற்போது கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக, இளம்பெண் மற்றும் அவரது குடும்ப புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் கோரி மிரட்டல் விடுவதாக கூறி கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்த இளம்பெண் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    வாட்ஸ்ஆப்பில் வந்த ஆப்பு! லிங்கை தொட்டவுடன் கடன் வாங்கியதாக மெசேஜ்!

    டாக்குமெண்ட் வேண்டாம், செக் லீப் வேண்டாம், கையெழுத்து கூட வேண்டாம் மொபைல் போனில் அப்ளை செய்தால் அடுத்த நொடியே உங்கள் அக்கவுண்டில் பணம் கிடைக்கும் என ஆன்லைன் சூதாட்டங்களை போல மக்களிடம் பணம் பறிக்கும் லோன் ஆப்களின் கொடூரம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

    கேட்டவுடன் பணம் கிடைக்கிறது என்பதற்காக பலரும் அதனை டவுன்லோட் செய்து ஆயிரக்கணக்கில் கடன் பெறும் நிலையில் அவற்றிற்கு ஆயிரக்கணக்கில் கொடூர வட்டி வசூலிக்கப்படுகிறது.

     லோன் ஆப்கள்

    லோன் ஆப்கள்

    குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் கடன் பெற்றவர்களையும் அவர்களது குடும்பத்துப் பெண்களையும் ஆபாசமாக சித்தரித்து whatsapp மூலம் புகைப்படங்கள் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என அரசும் ரிசர்வ் வங்கியும் எச்சரித்தும் பொது மக்களின் விழிப்புணர்வின்மை காரணமாக கடன் செயலிகளின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுவித மோசடியாக கடன் பெறாமலேயே whatsapp லிங்கை தொட்டதால் கடன் பெற்றதாக கூறியதோடு ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவதாக கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகாரை கிளப்பியுள்ளார்.

    வாட்ஸ்ஆப் லிங்க்

    வாட்ஸ்ஆப் லிங்க்

    கோவை துடியலூரைச் சேர்ந்தவர் சரண்யா, படுகர் இனத்தைச் சேர்ந்தவ இவர் ஊட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மொபைல் போனில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்சப் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதை என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார். அதில் ஆன்மூலம் லோன் தருவதாக வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கை விட்டு வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் லோன் எடுத்துள்ளீர்கள் அதற்கான தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அவர்களிடம் நான் லோன் வாங்கவே இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள் கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். சரண்யா முடியாது என கூறவே தொடர்ந்து போன் செய்து சார்ச்சர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சரண்யாவின் குடும்பத்தினர் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாச வீடியோவாக சித்தரித்து அவருக்கே அனுப்பி லோன் தொகையை கட்டவில்லை என்றால் அனைவருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

     கண்ணீர் வீடியோ

    கண்ணீர் வீடியோ

    இதையடுத்து இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு சரண்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் எவ்வாறு ஏமாந்தேன் என்றும் இனி யாரும் வாட்சப்பில் வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம், அது போன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம், அது போல லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்யவும் என்னைப் போல் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என கண்ணிர் மல்க படுகர் மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+