காதலனுடன் தப்பிச் செல்ல முயன்ற இளம்பெண்.. துரத்தி பிடித்த தாய்.. அதகளமான கோவை..!
கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில், இளம் பெண் தன் தாயின் கண் முன்பு காதலுனுடன் தப்பி செல்ல முயற்சித்தார். தாய் பதற்றத்துடன் மகளை மீட்க முயற்சிக்க, பொது மக்கள் காரை கையும், களவுமாக பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைசியில் என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து வாசியுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மணிவேல் - கோமலவள்ளி தம்பதி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகள் மோகனா. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை மோகனா தன் தாயுடன், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக இருவரும் காலை பேருந்து நிறுத்தம் வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு சற்று அருகே ஒரு சிவப்பு நிற கார் வந்து நின்றுள்ளது. திடீரென மோகனா, அந்த காரில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த கோமலவள்ளி தனது மகளை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அப்போது காரில் இருந்த இளைஞர்கள் மோகனாவை காருக்குள் இழுத்து தப்பி செல்ல முயற்சித்தனர். இரண்டு தரப்பிலும் விட்டு கொடுப்பதாய் தெரியவில்லை. கோமலவள்ளி, மோகனாவின் தலை முடியை பிடித்தபடியே, காரின் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மக்கள் காரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். மக்கள் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது. கோமலவள்ளியின் போராட்டத்தை கண்ட மக்கள், மோகனாவை அவருடன் அனுப்பி வைக்க சொன்னார்கள்.
அந்த இளைஞர்கள் மோகனாவை காரில் இருந்து கீழே இறங்க கூட அனுமதிக்கவில்லை. இதனால் இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மக்களில் சிலர் அந்த இளைஞர்களை தாக்க முயன்றனர். மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். இருந்தபோதும் கோமவல்லி வற்புறுத்தியும், மோகனா காரில் இருந்து இறங்க மறுத்துவிட்டார்.
பிரச்னை பெரிதானதால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மோகனாவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல அந்த இளைஞர்கள் மற்றும் கோமலவல்லி ஆகியோரை அழைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த டேனியலும், மோகனாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை மீறி திருமணம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி மோகனா ஊருக்கு செல்லும்போது தப்பித்து செல்ல முடிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications