பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொடூரக் கொலை.. கோவை அருகே பெரும் பரபரப்பு
கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கொடூரத்தை தொடர்ந்து, கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்து, சடலம் சாலையோரம் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவி என உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியை கழுத்தை அறுத்து மர்ம நபர் கொலை செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications