Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றி துரைசாமியின் மரணம் மனதை பாதித்ததால் வெளிவந்த ரகசியம்.. பாக்யராஜ் வீடியோ குறித்து நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பணத்திற்காக ஆற்றில் குளிப்போரின் காலை உள்ளே இழுத்துவிட்டு சாகடிக்கும் கும்பல்களை பற்றி நடிகர் பாக்யராஜ் பதிவிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி குறித்து வெளியிட்ட கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

பிரபல இயக்குனர் கே பாக்யராஜ் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இணைந்துள்ளார். அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பாக்யராஜ் கூறுகையில், ஒரு சில விஷயங்களை கேள்விப்படும் போது நமக்கு ஆறாத ரணமாக நமக்கு உறுத்திக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு விஷயத்தை பற்றி நாம் பார்ப்போம்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்..

 Comments made by netizens comparing Bhagyarajs video with Vetri Duraisamy

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 15 கிலோ மீட்டர் தூரத்தில் வனபத்திரகாளியம்மன் கோயில் இருக்கிறது. அதுக்கு பக்கத்தில் இருக்கும் நெல்லித்துறை இவை எல்லாம் நாங்கள் சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள் ஆகும். அங்கு வந்து அம்பரம்பாளையம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆறு நீலகிரி மலையில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றுக்கு சனி ஞாயிறு பிக்னிக் வருபவர்கள், கோயிலுக்கு வருபவர்கள் அங்கே போய் ஆற்றில் இறங்கி நீச்சல் அடிப்பது என்பது வழக்கம்.. இப்படி நீச்சல் அடிக்கும் போது, என்னவென்று பார்த்தால், சுழலில் சிக்கி தண்ணீர் எங்கோ சுழற்றி கொண்டு போய்விட்டது என்று சொல்வார்கள்.. அப்படி தேடிப்பார்த்தால் உள்ளே உடல் கிடைக்காது, சுழலில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியிருப்பார்கள் என்று அந்தபகுதியில் சொல்வார்கள்..

அப்போது பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் தண்ணீருக்குள் ரொம்ப நேரம் மூழ்கி இருந்து எடுத்துகிட்டு வருவதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. அப்புறம் அந்த ஆளை போய் கேட்டால், அவரோ இல்லிங்க.. ஐந்துநிமிடம் மூச்சை அடக்கி சுழலில் போய் பார்த்தால் எனக்கே என்னாகும் என்று பயந்தார்.. அவரிடம் பணம் தருவதாக சொன்னவுடன் 1000 என்று சொல்லியிருக்கிறார்கள்..

ஆனால் முடியாது என்று சொல்ல, 2000, 2500 என ஆட்களை பொறுத்து , எப்படியாவது உடல் கிடைத்தால் போதும் என்று சொன்ன உடன், அவர் ஒரு இடம் தேடுவார்.. அப்புறம் இன்னொரு இடம் தேடுவார்.. அப்புறம் 3 நிமிடம் , 4 நிமிடம், ஐந்து நிமிடம் கழிச்சு வெளியே பாடியை எடுத்துக் கொண்டு வருவார்.. அவரால் ஐந்து நிமிடம் மூச்சை தம் கட்ட முடியும்.. அதன்பிறகு பேசிய பணத்தை உடலை வாங்கியவர்கள் கொடுத்துவிடுவார்கள்.. இது இப்படி அடிக்கடி நடப்பது உண்டு. அதற்கு அப்புறம் தான் பின்னாளில் ஒரு நாள் தெரிந்தது..

அந்த இளைஞருக்கு மூழ்கி மூச்சை தம் கட்டும் பழக்கம் இருப்பதால், உள்ளே தண்ணீருக்கு அடியில் மூழ்கி டப்புன்னு காலபுடிச்சு இழுத்து பாறைக்கு இழுத்து சென்று, பாறைக்கு அடியில் சொருகிவிடுவார்.. அப்புறம் எல்லாம் வந்து தேடும் போது, அந்த இளைஞரே வந்து எடுத்துக் கொடுப்பது போல் வந்து எடுப்பார்,.இதை தொழில் மாதிரியே ஒருத்தன் பண்ணிக்கொண்டு இருந்தான் என்றால் எவ்வளவு கஷ்டம். ஒருத்தனை அடிச்சு புடுங்குறது,ஏமாற்றி புடுங்குறதை விட மோசமானது.. தண்ணீருக்கு அடியில் தம் கட்டுவதற்கான பவர் இருப்பதை தவறாக பயன்படுத்தி எவ்வளவு தப்பா அதை பயன்படுத்தி இருக்கான் என்று நினைக்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை" என்று பாக்யராஜ் கூறினார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் பகுதியில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களையும் கூறியுள்ளனர். கந்தசாமி என்ற நெட்டிசன் கூறுகையில், ஆமாம், வனபத்ரகாளியம்மன் கோயில் செல்பவர்கள் சொல்லி இதை நானும் கேட்டிருக்கிறேன்.
கேடுகெட்ட மனிதர்கள் செய்யும் கொடூரச்செயல் இது. பல குடும்பங்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நாகராஜன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், விலை மதிப்பில்லாத மனித உயிர், சில ஆயிரங்களுக்காக பறிபோகிறது என்பது மிகவும் வேதனைக்குறியது, இதேபோல் சம்பவங்கள் ஒகேனக்கல் பகுதியிலும் நடந்து வந்தது, இப்பொழுது சாலை விபத்து போலவும் செய்து கொள்ளையடிக்கின்றனர் இது போன்ற மனசாட்சி இல்லாத மிருகங்கள். இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை தேவை என்று கூறியுள்ளார்.

மாவேந்தன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றி துரைசாமியின் மரணம் மனதை பாதித்ததால் வெளிவந்த ரகசியம்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தமிழ்நாட்டு காவல்துறையினர் மிக திறமையானவர்கள் என
உலகமே போற்றிக் கொண்டிருக்கிறது. கூட்டத்தோடு களை எடுக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் கே பூபதி என்பவர் வெளியிட்ட பதிவில், கொடிவேரி அணையில் இது போன்று நடப்பதாக கேள்விபட்டுருக்கிறேன் என்று கூறியுள்ளார். வீராக்குமார் என்பவர் வெளியிட்ட பதிவில், மேட்டுப்பாளையம் ,கொடிவேரி அணை , ஒக்கேனக்கள் போன்ற இடங்களில் இது பல ஆண்டுகளாகவே நடக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் உள்ளது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை என்று கூறியுள்ளார்,

பாலமுருகன் என்பவர் வெளியிட்ட பதிவில், பாக்யராஜ் சார், இதே போல் ஒரு கதையை நான் நாவலாகவே பல ஆண்டுகளுக்கு முன்பே படித்துள்ளேன். சுபா/பிகேபி/ராஜேஷ்குமார் இவர்களில் யாரோ இந்த கதையை எழுதியிருந்தார்கள் என்று கூறியுள்ளார். அன்புசெழியன் என்பவரோ, சார் இதை நீங்க ஒரு படமா எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க என்று கூறியுள்ளார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+