மானம், மரியாதை இருக்கா.. ஸ்ரீநிதி நாயுடுவை கிழித்த காங்கிரஸ் கவுன்சிலர்.. ஜோதிமணி ஹேப்பியாமே
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இப்போதும் அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக ஜோதிமணி பெரிய குண்டை போட்டார். இதற்கு அந்தக் கட்சியின் மற்றொரு பெண் நிர்வாகி ஸ்ரீநிதி எதிர்ப்பு தெரிவித்து ஜோதிமணியை விமர்சித்திருந்தார். இதில் கடுப்பான கோவை காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, ஸ்ரீநிதிக்கு மானம், மரியாதை, சூடு, சொரணை இருக்கிறதா என்று கிழி கிழி என கிழித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்தவில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது. சர்வே என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு, கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வேட்பாளர்களாக்கினர் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சிங்காநல்லூரில் போட்டியிட்ட ஸ்ரீநிதி என்கிற வேட்பாளர், வேட்பாளர் தேர்வில் உள்ள கருத்து வேறுபாட்டை கட்சி தலைமையிடம் தான் சொல்ல வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஸ்ரீநிதிக்கு கடும் எதிர்ப்பு
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், கோவை மாநகராட்சி கவுன்சிலருமான காயத்ரி செய்தியாளகளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு கட்சிக்கு போவது தான் அரசியல் டிரெண்ட். எல்லா கட்சியிலும் அடித்தட்டத்தில் உழைப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். யாருக்கும் கட்சி உணர்வு கிடையாது. அரசியலை வியாபராமாக பார்க்கிறார்கள். அரசியலை வியாபாரமாக பார்க்க கூடாது. அந்தந்த கட்சியில் இருப்போர் அங்கேயே இருங்கள். கட்சி உணர்வு ரத்தத்தில் இருக்க வேண்டும்.
எங்கிருந்தோ வந்த ஸ்ரீநிதி போன்ற கேரக்டருக்கு சீட் கொடுத்தனர். பாஜக அண்ணாமலையிடம் சீட் கேட்டு கிடைக்காததால் காங்கிரஸில் சேர்ந்தார். இதையெல்லாம் மறுத்து சீட் வாங்கினார். உழைத்து ஓட்டு வாங்க முயற்சிக்காமல் அடுத்த கட்சிக்கு தாவ முயற்சிக்கிறார். அவர் இங்கேயே இருந்து உழைக்கவா போகிறார். இங்கிருந்து உழைத்தால் எல்லோரும் மதிப்பு கொடுப்போம். ஸ்ரீநிதி எப்படி எம்பி ஜோதிமணியை விமர்சிக்கலாம். அது ரொம்ப தவறு.
மானம் மரியாதை இருக்கா
சிங்கம் மாதிரி மக்கள் சேவை செய்யும் ஜோதிமணியை விமர்சனம் செய்ய ஸ்ரீநிதிக்கு கடுகளவும் தகுதி இல்லை. சமூகவலைதளங்களில் பிரபலமைடைய 1,000 வழிகள் இருக்கு. அடுத்தவர்களை விமர்சித்து அரசியலில் மேலே வரலாம் என்று நினைக்க வேண்டாம். இப்படி இருந்தால் ஸ்ரீநிதிக்கு எந்தக் கட்சியின் கதவும் திறக்காது. கட்சிக்கு வேலை செய்ய வந்தவரை ஸ்ரீநிதி அவமரியாதை செய்தார். கே.சி. வேணுகோபாலையே அவர் அவமானப்படுத்தினார். ஆனால் அவருக்காக நாங்கள் எல்லாம் பணியாற்றனோம்.
வண்டியை விட்டு கீழே கூட இறங்கவில்லை. அடிப்படை உறுப்பினர்கள் கூட இல்லாதவர்கள் கோஷம் போடுவதை ஏற்க முடியாது. யாரை எந்த நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு தெரியும். அப்படித்தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி மாறுவது அசிங்கமான செயல். இருக்கும் கட்சியில் உழைத்து பாருங்கள். அது சிறப்பாக இருக்கும். மானம், மரியாதை, சூடு, சொரணை எல்லாம் வேண்டும். அது இருக்கிறதா என்பதை அவரிடம் கேளுங்கள்.
கட்சி மேலிடம்
நான் கட்சிக்காக 4250 கி.மீ நடந்திருக்கேன். எவ்வளவு வலி, வேதனை இருக்கும். சீட் கிடைக்கவில்லை என்பதற்காக நான் எதற்கும் வருத்தப்படவில்லை. நானும் ஒருநாள் தேர்தலில் வெற்றி பெறுவேன். இதுதான் வீர தமிழிச்சி. ஸ்ரீநிதி போன்ற பலர் மாற்று கட்சிக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை விமர்சிப்பதை மேலிடம் தடுக்க வேண்டும். யார் எப்போது வேண்டுமானாலும் வரலாம், செல்லலாம் என்று இருக்க முடியாது. கட்சி மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாரும் யாரையும் முதுகில் குத்தவில்லை. அதிமுக மற்றும் பாஜகவுடன் திமுக பேசியதால் தான் எங்கள் மேலிடம் முடிவு செய்தது. திமுகவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் தாயும் பிள்ளையுமாக, அண்ணன் தம்பியாக இருந்துள்ளோம். என்றைக்கும் நாங்கள் அடித்து கொண்டதில்லை. குடும்பத்திற்குள் பிரச்சனை வருவது இயல்புதான். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழகத்திற்கு விஜய் போன்ற இளம் முதலமைச்சர் கிடைத்திருப்பது நல்லது. தன்னம்பிக்கைக்கு அழகு சேர்த்துள்ளார்" என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications