கோவையில் அன்று அண்ணாமலை சொன்ன 'வியூகம்.. இன்று 'இந்தியா' கூட்டணி கையிலெடுக்க வாய்ப்பு
கோவை: கோவையில் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பில் சாம தான பேத தண்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்... ஆனால் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்த முறை அந்த வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பாதி ஓட்டுகள் வரை எண்ண வேண்டியுள்ளதால் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
லோக்சபா தேர்தலில் 2014, 2019 ஆகிய இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடனே ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலையில் உள்ளது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான ஆந்திராவின் தெலுங்குதேசம் மற்றும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை உள்ளன. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் 16 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்த இரு கட்சிகளின் தயவு இருந்தால் தான் பாஜக பிரச்சனையில் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

ஏனெனில் பாஜக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்புகளின் படி, ஐந்து தொகுதிகளில் வெற்றி உள்பட 246 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தொட வேண்டும் என்றால் இன்னும் 26 இடங்களில் கூடுதலாக பாஜக வெற்றி பெற வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளதாக என்பது தெரியவில்லை..
இந்த முறை உத்தப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் எதிர்பாராத அளவிற்கு பாஜக தோல்வி அடைந்ததே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 295 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முடியும் என்றாலும், பாஜகவின் ஆட்சியை தடுக்க காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிகள் ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் மற்றும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ய தொடங்கிவிட்டன. இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவார், அவர்கள் இருவரிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். ஒருவேளை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் இந்தியா கூட்டணி பக்கம் தாவினால் பாஜகவின் நிலைமை சிக்கல் ஆகவிடும்.
கோவையில் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பில் சாம தான பேத தண்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்... ஆனால் இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்த முறை அந்த வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பாதி ஓட்டுகள் வரை என்ன வேண்டியுள்ளதால் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. கடைசி நேரத்தில் 20 அல்லது 30 தொகுதிகளில் நிலைமை மாறினாலே, இந்தியா கூட்டணிக்கு சாதகமாகும் என்பதால் அந்த கட்சிகள் மிகவும் கவனமாக காய்நகர்த்தி வருகின்றன.
-
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications