Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு இல்லாட்டி ஒத்துழைப்பு கொடுங்க.. ஈஷா நிர்வாகம் மீது முத்தரசன் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவை ஈஷா யோகா மையத்தில் அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இந்நிலையில் ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஈஷா மீது தவறு இல்லையென்றால், அவர்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாலஸ்தீன போரில் 45,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

isha mutharasan

இந்தியாவை பொறுத்தவரை ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டது. பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது. தற்போதுள்ள மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது. இது இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு.

காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு உரிமையும் உண்டு. சாம்சங் நிறுவனம் அதை மறுக்கிறது. இதில் முதல்வர் தலையிட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு 3 அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவையில் பழங்குடி மலைவாழ் மக்கள் இருக்க கூடிய பெரியநாயக்கன்பாளையம், ஆனைக்கட்டி, வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் இடத்தை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். தனியார் நிறுவனத்தினர் அரசு இடம், வனத்துறை இடம் மலைவாழ் மக்கள் இடம் ஆகியவற்றில் நவீன விடுதிகளை உருவாக்கி வருகிறார்கள்.

ஒரு தனியார் விடுதிக்கு ஆதரவான முறையில் ஆனந்தன் என்பவரை காவலர்கள் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்கிறார்கள். பொய் வழக்கு போடுகிறார்கள். காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய அனைவரும் தனியார் விடுதிக்கு ஆதரவாக இருப்பது நல்லதல்ல

இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈஷா வனத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். பெண்களை மூளை சலவை செய்து தாய் தந்தை சொல்வதை கூட கேட்க மறுக்கும் அளவிற்கு அங்கு நடக்கிறது. பாலியல் வழக்கில் ஈஷா மையம் உச்சநீதிமன்றம் சென்று விசாரணைக்கு தடை வாங்கி உள்ளது. ஈஷா மீது தவறு இல்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மகாசிவராத்திரி விழாவிற்கு அங்கு குடியரசு தலைவர் வருகிறார். இது என்ன நிலைமை?. ஈஷாவில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்லாறு பழப்பண்ணையை யானை வழித்தடம் என்று கூறி மூடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பல்வேறு விவசாயிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும்.

ஒன்றிய அரசு பின்பற்றும் தவறான பொருளாதார கொள்கையால் எண்ணெய் விலை உட்பட பலவற்றின் விலை உயர்ந்துள்ளது.

மக்களுக்கு சம்பளம் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் குறித்து, வெங்கடாஜலபதி சாமியும் புகார் தெரிவிக்கவில்லை. லட்டை சாப்பிட்ட மக்களும் உடல்நிலை சரியில்லை என கூறவில்லை.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, விவசாய பிரச்னை எல்லாம் உள்ளது. இது அரசியல் அநாகரீகம். சிறு குறு தொழில்கள் காப்பாற்றபட வேண்டும், நேரு பிரதமராக இருந்த போது சிறு குறு தொழில்களில் சில கொள்கை முடிவுகளை எடுத்தார். மோடி அரசு அதனை எல்லாம் விட்டுவிட்டது. மின் கட்டண உயர்விற்கு மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+