Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடைகளை கழட்டி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண்.. நம்ம "கொல்லிமலை"யிலா இப்படி.. உருக்கம்!

ஆடைகளை கழட்டி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி உயிரைவிட்டுள்ளார் ஒரு பெண்

Subscribe to Oneindia Tamil

கோவை: காதலில் தோல்வியுற்ற பெண், வாழ விருப்பமின்றி திடீரென அந்த முடிவை எடுத்துவிட்டார்.. உயிர்பிரியும் நேரத்திலும் தன் சம்பிரதாய வழக்கத்தையும் காப்பாற்றிய சம்பவம் பலரையும் அதிர வைத்து வருகிறது.

கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா.. 26 வயதாகிறது.. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும்.

கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.. அதனால், தனியாகவே ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

 லேப் டெக்னீஷியன்

லேப் டெக்னீஷியன்

இந்தநிலையில் சம்பவத்தன்று மேகலா பிரியா வேலைக்கு போகவில்லை.. வழக்கமாக கரெக்ட்டாக வேலைக்கு சென்றுவிடும் மேகலா, அன்றைய தினம் போகாததால், அவருடன் பணியாற்றும் ஊழியர்கள், போன் செய்தார்கள்.. ஆனால் மேகலா யார் போனையும் எடுக்கவில்லை. இதனால் ஊழியர்கள், நேராகவே அவர் தங்கியிருந்த வீட்டுக்கு போனார்கள்.. அங்கு அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது... பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை... சந்தேகம் வலுவடைந்த ஊழியர்கள் உடனடியாக ரத்தினபுரி போலீசுக்கு தகவல் சொன்னர்கள்.. அவர்களும் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்...

 நிர்வாணம்

நிர்வாணம்

அங்கு நிர்வாண நிலையில் மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.. இதையடுத்து அவரது உடலை உடலை போலீசார் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண கோலத்தில், ஃபேனில் தொங்கிய சடலம் பல சந்தேகங்களை போலீசாருக்கு எழுப்பியது.. மேகலா பிரியா பயன்படுத்திய செல்போனையும் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்... அப்போதுதான், மேகலாவின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது..

சூப்பர்வைஸர்

சூப்பர்வைஸர்

பிரசாந்த் என்ற இளைஞரும் மேகலாவும் காதலித்து வந்துள்ளனர்.. பிரசாந்த்திற்கு 25 வயதாகிறது.. அரூர் அருகே உள்ள கோபாலபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த்.. ஒரு தனியார் கம்பெனியில் சூப்பிரவைசராக வேலை பார்த்து வந்துள்ளார்.. பிரசாந்த்தை உயிருக்குயிராக நேசித்த மேகலா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இத்தனை நாட்களும் காதலித்துவிட்டு, திடீரென கல்யாணத்துக்கு மறுப்பது சரியல்ல என்று மேகலா சொல்லியதுடன், திருமணத்துக்கும் வற்புறுத்தி உள்ளார்..

 எரிச்சல்

எரிச்சல்

இதனால் எரிச்சலடைந்த பிரசாந்த், மேகலாவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்.. சம்பவத்தன்றும் இப்படித்தான் பிரசாந்த்துக்கு போன் செய்து, திருமண பேச்சை எடுத்துள்ளார் மேகலா.. அப்போதும் பிரசாந்த், திருமணத்துக்கு மறுத்துள்ளார்.. இருவருக்கும் இடையே காரசார விவாதமும் நடந்துள்ளது... தன்னை காதலன் ஏமாற்றிவிட்டதால், அதை தாங்கி கொள்ள முடியாத மேகலா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்...

 டிரஸ்ஸில்லாமல்

டிரஸ்ஸில்லாமல்

இதற்கு பிறகு, மேகலா எதற்காக, நிர்வாண நிலையில் தூக்கில் தொங்க வேண்டும் என்று போலீசார் விசாரித்தனர்... மேகலாபிரியா கொல்லிமலை வட்டாரத்தை சேர்ந்தவராம்.. ஆதிவாசி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராம்.. ஆதிவாசிகள் வழக்கப்படி, இவரது குலத்தை சேர்ந்தவர்கள், இறக்கும் முன்பு ஆடைகள் இன்றி இருக்க விரும்புவார்களாம்... அந்த சம்பிரதாயத்தின்படி தான், மேகலாபிரியா ஆடைகள் இன்றி தற்கொலை செய்துள்ளதாக சொல்கிறார்கள்..

 நொறுங்கிய லவ்

நொறுங்கிய லவ்

பிரசாந்தும், மேகலாவும் 2 வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. நிறைய இடங்களுக்கும் மேகலாவை பிரசாந்த் அழைத்து சென்று ஊர் சுற்றி வந்துள்ளார்.. ஆனால், கல்யாணம் என்று பேச்சை எடுத்தபோது, சாதியை காரணம் காட்டி உள்ளார்.. இதில்தான் மேகலா நொறுங்கிப்போய் இந்த முடிவை எடுத்துள்ளார்.. இன்றைய நவீனயுகத்தில், படித்த பெண்களே என்றாலும்கூட, உயிருக்குயிராக காதலித்து ஏமாந்த நிலையிலும்கூட, உயிரையே இழக்கும் தருவாயிலும்கூட, தன் குல சம்பிரதாயத்தின்படி, ஆடைகளை கழட்டிவைத்துவிட்டு தூக்கில் தொங்கியது பலரையும் விக்கித்து போகவைத்து வருகிறது... அதுவும் நம் கொல்லி மலையில்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+