வேலுமணிக்கு சிக்கல்.. நிதி ஒதுக்கியாச்சு.. திட்டம் எங்க? ஒப்பந்தங்களை தூசு தட்டும் ஒரு நபர் கமிஷன்!
கோவை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முந்தைய ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட டேவிதார் கமிஷன் கோவை மாநகராட்சியில் நேற்றும் இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஒரு நபர் கமிஷன்
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. டேவிதார் 3 மாதங்களுக்குள் தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட மாநகராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 3 மாதங்களே அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி வாரியாக
டேவிதார் ஒரு நபர் கமிஷன் ஒவ்வொரு மாநகராட்சியாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் டேவிதார் தனது ஆய்வை முடித்து தகவல்களைத் திரட்டியுள்ளார்.
தற்போது கொங்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை டேவிதார் ஆய்வு செய்தார். நேற்று கோவை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் பெரும் முறைகேடு
கோவை மாநகராட்சியில், சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு, 56 பணிகள் திட்டமிடப்பட்டன. அவற்றில் பாதி முடிவடைந்துள்ளன. இதுவரை, ரூ.719 கோடி செலவாகியிருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் திட்டங்களிலும், டெண்டரிலும், கட்டுமானப் பணிகளிலும் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே மீண்டும் மீண்டும் டெண்டர் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

கோவை மாநகராட்சியில் அய்வு
கோவை வந்த டேவிதாருக்கு, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் தொடர்பாக விளக்க கையேடு மாநகராட்சி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.
பல பணிகள் முழுமையாக முடியாமல் அரைகுறையாக இருந்ததால் அதிருப்தி அடைந்த டேவிதார், சில அலுவலர்களை தன்னை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கைவிடப்பட்ட திட்டங்கள்
தனியார் பங்களிப்பில், 25 இடங்களில் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்க திட்டமிட்டு, ஒரே ஒரு இடத்தில் மட்டும் வைத்ததோடு, அத்திட்டம் கைவிடப்பட்டு இருப்பது குறித்து டேவிதார் விசாரித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அவருக்கு பதிலளித்துள்ளனர்.
டேவிதார் கோவையில் இன்றும் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

சிக்கும் வேலுமணி
ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள், மாநகராட்சியுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை ஆய்வு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது உறவினர்கள் பெயரிலும், நெருக்கமானவர்கள் பெயரிலும் பல திட்டங்களை காண்ட்ராக்ட் எடுத்திருப்பதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications