ஆசையாய் வளர்த்த நாயால் வந்த வினை.. கோவையை சோகத்தில் மூழ்கடித்த இளம் பெண் மரணம்
கோவை: கோவை முழுவதுமே தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் நாய்களுக்கு ஆதரவான தன்னார்வலர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த நாய் கடித்து, நாய் பிரியரான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதுமே தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நாய்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. மக்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது, ரேபிஸ் நோய் அபாயம் என்று எண்ணற்ற பிரச்னைகள் உருவாகின்றன.

கோவை மாவட்டத்திலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காவல்துறை, மாநகராட்சி கடுமையான எச்சரிக்கை விடுத்து, வழக்குப்பதிவு செய்தும் பிரச்னைகள் குறையவில்லை. தினசரி தெரு நாய்களால் ஆங்காங்கே பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தெரு நாய்கள் மட்டுமல்ல, வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்களும் கூட அவ்வப்போது மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண் நாய்கள் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். இவர் அக்கம், பக்கம் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். தினசரி தெருநாய்களுக்கு உணவளிப்பது, அவற்றுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சிகிச்சைக்கான உதவி செய்வது என்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அவர் வீட்டிலேயே சுமார் 4 நாய்களை பாசமாக வளர்த்து வந்துள்ளார். அதில் கடந்த ஜுலை மாதம் இரண்டு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு நாய் அந்த பெண்ணை கடித்துள்ளது. அவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர் அந்த இளம் பெண்ணுக்கு புண் தீவிரம் அடையாமல் இருப்பதற்கான ஊசி மட்டும் செலுத்தினார் என்றும் ரேபிஸ் நோய்க்கான ஊசி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெண்ணுக்கு ரேபிஸ் நோய்க்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் குறித்து அவர் தெரிந்துகொள்வதற்கு முன்பே, அந்த நோய் தீவிரமடைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், உயிரிழக்கும் வரை கூட தனக்கு ரேபிஸ் நோய் இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவில்லை. நாய் கடித்த உடனே அவர் ரேபிஸ் தடுப்பூசி சிகிச்சை எடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்ஜிஓ உதவியுடன் கோவை மாநகரில் சுமார் 10,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்றார்.
நாய்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், ரேபிஸ் நோயால் உயிரிழந்திருப்பது நாய் பிரியர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தன்னார்வலர்கள் நாய்களை மீட்பது, உணவளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற நேரத்தில் அலட்சியம் காட்டாமல் சிகிச்சை எடுக்க வேண்டும். ரேபிஸ் நாய்கள் மூலம் மட்டுமே பரவாது. பூனை, குரங்கு, குதிரை, ஆடு, மாடு, கழுதை, வௌவால், எலி, அணில் மூலமாகவும் ரேபிஸ் பரவும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications