Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி அப்பீல் வழக்கு- எந்த நேரத்திலும் தீர்ப்பு.. எல்.முருகன் பரபர!

Subscribe to Oneindia Tamil

கோவை: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திமுக தலைவர்களான ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பது லோக்சபா தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்ட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2018-ம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

Delhi Court to deliver verdict in 2G Spectrum appeal plea against A Raja Kanimozhi L Murugan

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன.

தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர்களாக ஆ.ராசா. கனிமொழி மீண்டும் போட்டியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்த பின்னணியில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசத்துக்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தேசத்தின் வளர்ச்சியை யார் செய்தது பாஜக என்பது மக்களுக்குத் தெரியும். தேசத்தின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களையும் மக்கள் அறிவார்கள். 2ஜி எவ்வளவு பெரிய ஊழல்? 2ஜி ஊழல் வழக்கில் தற்போது அப்பீல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் என்றைக்கும் கூட தீர்ப்பு வர தயாராக இருக்கிறது என்றார். இதனால் தமிழக லோக்சபா தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+