'பாரத் மாதா கீ ஜே'.. மு.க.ஸ்டாலின் முன்பு கோஷமிட்ட இளைஞர்... கோவையில் பரபரப்பு
கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வருகை தந்தபோது பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

கோவை: கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது "பாரத் மாதா கீ ஜே" என்று கோஷமிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஈரோடு வந்திருந்தார். பிறகு விழா முடிந்து சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.

அங்கு திமுக தொண்டர்கள் ஸ்டாலினை பார்த்ததும் முழக்கமிட்டபடி வரவேற்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர், திடீரென "பாரத் மாதா கீ ஜே" என்று கோஷமிட்டார்.
இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோஷமிட்டவரை போலீசார் விமான நிலையத்திற்குள் உடனடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

டெல்லியை சேர்ந்த சரீஷ் ஹரி ஒம் என்ற இளைஞர்தான் இப்படி முழக்கமிட்டவர் என்பதும், பெங்களூரில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு டெல்லி செல்கின்றார் என்றும் தெரியவந்தது. முழக்கமிட்டபோது அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு, சோஃபியா என்ற இளம் பெண் "பாசிச பாஜக ஒழிக" என்று கோஷமிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications