பிரதமரின் தாயை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன் காட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல். பிரதமரின் தாய் தேசத்திற்கே தாய் போன்றவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போடுவதும், அதை ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் ரசிப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸின் வெறுப்பு அரசியலை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது. காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பேரணியில் பீகாரில் ராகுல் காந்தி பேரணியை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென் மோடியை சிலர் தவறாக பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

denigrating-the-prime-ministers-mother-is-an-act-of-insulting-the-nation-says-vanathi-srinivasan

பிரதமர் தாய் குறித்து தகாத வார்த்தை

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், யாத்திரையின் மேடையில் இருந்த சிலர் மோடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் கூறியதை பொது மேடைகளில் திரும்ப கூறக் கூட முடியாது. அந்த அளவுக்கு அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தேசத்துக்கே அவமதிப்பு

இந்நிலையில், பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல். பிரதமரின் தாய் தேசத்திற்கே தாய் போன்றவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போடுவதும், அதை ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் ரசிப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸின் வெறுப்பு அரசியலை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது. காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை இழிவுபடுத்தி சிலர் கோஷமிட்டுள்ளனர். அதை கண்டிக்காமல் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ரசித்துள்ளனர்.

கொச்சைப்படுத்திய காங்கிரஸ்

140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் தலைமகன் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தாயார் 100 வயது வரை வாழ்ந்து மறைந்தவர். மகள் 12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராகவும், அதன் பிறகு பிரதமரான பிறகும், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் மிகமிக எளிமையாக வாழ்ந்தவர். எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்.

பிரதமரின் தாய் தேசத்திற்கே தாய் போன்றவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போடுவதும், அதை ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் ரசிப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸின் வெறுப்பு அரசியலை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது. பிரதமர் பதவியை தனது குடும்பச் சொத்தாக நினைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியின் கனவை தகர்த்தவர் பிரதமர் மோடி.

பகிரங்க மன்னிப்பு

அந்த விரக்தியில் பல்வேறு பொய்களை பரப்பி நாட்டில் வன்முறையை தூண்ட கலக யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். அதில்தான் பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியுள்ளனர். பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை இழிவுப்படுத்தும் செயல். இதற்காக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+