Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட்டியுடன் "சவுண்டு" விட்ட திமுக மாலதி.. ஒரே இடைஞ்சல்.. அசராத பாஜக புள்ளி.. கடைசியில் பார்த்தால்..?

மரக்கன்றினை பிடுங்கி எறிந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கோவை: மரக்கன்றினை பிடுங்கி எறிந்த விவகாரத்தில், பாஜக பிரமுகர் மீது திமுக பெண் கவுன்சிலரும், திமுக பெண் கவுன்சிலர் மீது பாஜக பிரமுகரும் மாறி மாறி புகார்களை போலீசில் தந்துள்ளனர்.. என்ன நடந்தது?

கோவை மாநகராட்சியில் 34-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் மாலதி. கல்விக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.. இவர் கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி, சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார்.. இவர்கள் இருவருக்கும் வீட்டின் முன்பாக கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 பாஜக சுபாஷ்

பாஜக சுபாஷ்

அதாவது, மாலதியின் கார் நிறுத்துவதற்கு, வாசலில் நட்டுவைத்திருந்த மரக்கன்று ஒன்று இடையூறாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மாலதியின் காரில், நைட் நேரத்தில் யாரோ கீறல் போட்டுள்ளதாகவும் மாலதி குற்றஞ்சாட்டினார்.. இதன் காரணமாக, மாலதிக்கும் சுபாஷுக்கும் மறுபடியும் வாக்குவாதம் நடந்துள்ளது.. அப்போது, மரக்கன்றை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும், தன்னால் காரை நிறுத்த முடியவில்லை என்றும் மாலதி தெரிவித்துள்ளார்... ஆனால், மரக்கன்றினை அகற்ற முடியாது என்று சுபாஷ் மறுத்துவிட்டார். இதனால் மாலதி மறுபடியும் ஆவேசமடைந்ததுடன், அங்கிருந்த அந்த மரக்கன்றையே பிடுங்கி வீசியுள்ளார்...

 நைட்டியுடன்

நைட்டியுடன்

இதை அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.. மரக்கன்றை பிடுங்கி வீசியதுடன் இல்லாமல், இது தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக் கொள்ளுங்கள், யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வா என்று மாலதி சொல்லி உள்ளார்.. மாலதி பேசிய அத்தனையும் வீடியோவாக சுபாஷ் ரிக்கார்ட் செய்ததுடன், அதனை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், மாலதி உடனடியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு விளக்கம் தந்தார்..

பிடுங்கியெறிந்து

பிடுங்கியெறிந்து

அதில், "நான் மரக்கன்றை பிடுங்குவது போன்ற வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது.. ஆனால் அதற்கு முன்பு என்ன நடந்தது? என்பதை சொல்ல வேண்டும். சுபாஷ் பாஜக-வைச் சேர்ந்தவர். நாங்கள் வசித்து வரும் பகுதியின் சாலை மொத்தமாகவே 13 அடி தான்... சுபாஷ் குடும்பம்தான், அந்தப் பகுதியில் முதல் வீட்டில் வசித்து வருகின்றனர். அவரின் வீட்டைக் கடந்துதான் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். அந்த பகுதியில் பாதாள சாக்கடை வேலை நடந்து வருகிறது. நாங்கள் முன்பே அங்குதான் கார் நிறுத்தி வருகிறோம்... இதனால் அங்கிருப்பவர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர்...

 ஆணியால் கீறி

ஆணியால் கீறி

அவர்கள் சாலையிலேயே ஆட்டுக்கல், அம்மிக்கல், அடுப்பு, மரம் என எல்லாவற்றையும் வைக்கிறார்கள்.. இதை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையாளரும் ஏற்கனவே சொல்லி உள்ளார்.. மேலும், வழியில் இருந்த 2 சின்ன மரத்தையும் மாநகராட்சி அகற்றி விட்டது.. ஆனால் அகற்றிய 1 மணி நேரத்தில் மறுபடியும் 4 மரங்களை அங்கு வைத்துவிட்டனர்.. இதை அங்குள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி இளைஞர்கள்தான் செய்தார்கள்.. இப்போதுகூட நான் காரை நிறுத்தும்போது, காரை நிறுத்தினால் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.. இது தொடர்பாக புகார் தந்துள்ளேன்.. இன்னைக்கு காலையில் தூங்கி எழுந்து பார்த்தால், என் காரை ஆணியால் கீறி வைத்திருக்கிறார்கள்..

 ஆபாச வார்த்தை

ஆபாச வார்த்தை

இதை நான் கேட்டதற்கு, என்னை ஆபாசமாக கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டார்கள்.. பாஜகவினர் இதை அரசியல் செய்ய பார்க்கின்றனர்.. நாங்கள் மாநகராட்சி உத்தரவின் பேரில் 4 மரங்களை அகற்றி திரும்ப 40 மரங்கள் வைக்க போகிறோம்.. ஆனால், பாஜக, மதங்களை போலவே, மரங்களை வைத்து அரசியல் செய்கிறது.. அந்தச் செடியை உடைத்தது உண்மைதான். அதற்கு முன்பு முறைப்படிதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் மீண்டும் தகாத வார்த்தைகளில் பேசியது என்னால் தாங்க முடியவில்லை.... அரசியல் செய்வதற்கு வேறு வழி தெரியாமல், ஒரு வீடியோவை மட்டும் வைத்துக் கொண்டு தவறான தகவலை பரப்புகின்றனர். அதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

 இடைஞ்சல்

இடைஞ்சல்

அங்கு வந்து பிரச்னை செய்ததில், 99 சதவிகிதம் பேர் எங்கள் வார்டை சேர்ந்தவர்களே கிடையாது.. பல்வேறு இடங்களில் உள்ள பாஜகவினரை அழைத்து வந்து ரகளை செய்கின்றனர் என்றார் ஆவேசமாக. இதேபோல மாலதி மீது சுபாஷ், துடியலூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.. அதில், "அவர் கார் நிறுத்துவது இடைஞ்சல் இல்லையாம்.. நாங்கள் செடி வைத்தது மட்டும் இடைஞ்சலா? கேட்டால் அப்படித்தான் செய்வோம் என்கிறார். பொறுப்புள்ள கவுன்சிலர் இப்படி செய்யலாமா? ஆளுங்கட்சி என்பதால் அராஜகம் செய்கின்றனர் என்என சுபாஷ் தன் புகாரில் தெரிவித்திருக்கிறார்.. இப்படி இரு தரப்பிலுமே புகார்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

 வேப்ப மரக்கன்று

வேப்ப மரக்கன்று

இந்த சம்பவத்துக்கு இரு தரப்பினருக்குமே ஆதரவும் எதிர்ப்பும் கூடி வருகிறது.. என்ன இருந்தாலும், பேசி தீர்த்துக் கொள்ள விஷயத்திற்காக, மரக்கன்றுகளை பிடுங்கி எறிவது எந்த வகையில் நியாயம்? வேப்ப மரக்கன்றுகள் வேரோடு பிடுங்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டது யார்? திமுக கவுன்சிலர்கள் மீது நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இன்னமும் இந்த சர்ச்சைகள் ஓயவில்லை என்கிறது ஒரு தரப்பு.. ஆனால், மாலதி தரப்பிலோ, மரத்தை பிடுங்கி எறிந்ததை, கவுன்சிலரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுவிட்ட பிறகும், காரை சேதப்படுத்தியது யார்? திமுக கவுன்சிலர் என்பதாலேயே, பழியை அபாண்டமாக போடுவதா? என்றும் மறுதரப்பில் நியாயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+